தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு சேனலும் புதுப்புது நிகழ்ச்சி சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பு வருகின்றன. இதனால் கடந்த சில ஆண்டுகளாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சின்னத்திரை பக்கம் திரும்பி விட்டனர். குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் செல்லம்மா. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் அன்ஷிதா மற்றும் அர்நவ் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலில் கதாநாயகி ஏற்கனவே கல்யாணம் முடித்து ஒரு குழந்தைக்கு அம்மாவாக இருக்கும் நிலையில் பிறகு தன்னுடைய மாமா பையன் கதாநாயகன் மீது காதல் கொண்ட இருவரும் சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் கதைக்களமாக உள்ளது. தற்போது செல்லமாவின் முதல் கணவரை கொலை செய்துவிட்ட நிலையில் இந்த சீரியலில் பல பிரச்சனைகள் முடிவுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் செல்லம்மா சீரியல் 700 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இன்னும் சில வாரங்களில் சீரியல் முடிவுக்கு வர உள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். பல சர்ச்சைகளுக்கு நடுவில் சீரியல் தற்போது நல்லபடியாக முடிவுக்கு வந்துள்ளது. சீரியலில் பல சதி வேலைகள் நடந்தாலும் அவற்றை முறியடித்து காதலர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து விட்டனர். இந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் நாயகி அன்சிகா கர்ப்பமாக இருக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டது. அப்போது சக நடிகர்கள் முன்னிலையில் எமோஷனலாக அவர் நிறைந்த கண்ணீருடன் நிற்கிறார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
