ஆர்த்தி கூட எல்லாம் வாழவே முடியாது, இத்தனை வருஷம் ஜெயம் ரவி வாழ்ந்ததே பெருசு.. உண்மையை உடைத்த பாடகி சுசித்ரா..!

By Nanthini on புரட்டாதி 10, 2024

Spread the love

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் முதலில் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நிலையில், கமல்ஹாசன் நாயகனாக நடித்த ஆளவந்தான் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பிறகு திடீரென ஹீரோவாக அறிமுகமாகி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இவர் முதன்முதலில் ஜெயம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தாஸ், மழை , உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார்.

   

இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் ஜெயம் ரவி 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயம் ரவியும் ஆர்த்தியும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் இருந்த நிலையில் தற்போது ஆட்சியை விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார். இருந்தாலும் அவரை விவாகரத்து செய்ததற்கான காரணத்தை வெளியிடவில்லை.

   

 

இந்தச் செய்தி ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி விவகாரம் புகைந்து கொண்டே இருக்கும்போது பாடகி சுஜித்ரா தனது youtube சேனலில் பேசி இருந்தார். அதில், என்னுடைய ஆதரவு ஜெயம் ரவிக்கு தான், ஆர்த்தி கூட எல்லாம் வாழவே முடியாது, அவர் மிகவும் ஆடம்பரமான பெண். அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்றால் ஜெயம் ரவி நைட் அண்ட் டே வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

அப்படியே வீட்டுக்கு சென்றாலும் ஆர்த்தி என்ன மனநிலையில் இருப்பார் என்று சொல்லவே முடியாது. ஆர்த்தி அழகாக இருந்ததாலும் குழந்தைகள் இருந்ததாலும் இத்தனை ஆண்டுகள் அவரின் முகத்தை பார்த்துக் கொண்டே ஜெயம் ரவி வாழ்ந்து விட்டார். இத்தனை வருடம் ஜெயம் ரவி அவர் கூட வாழ்ந்தது பெரிய விஷயம் என்று பாடகி சுசித்ரா பேசியுள்ளார். தற்போது அவர் அந்த வீடியோவில் சொன்னது போலவே விவாகரத்தில் வந்து முடிந்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.