ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்… அதற்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா…?

By admin on புரட்டாதி 8, 2024

Spread the love

உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியாவின் மிக முக்கிய நடிகர்களுள் ஒருவர். தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடன இயக்குனர், பின்னணி பாடகர், பாடல் ஆசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர், சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி என பன்முகங்களைக் கொண்டவர் கமலஹாசன்.

   

தனது ஐந்து வயது முதல் தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் கமலஹாசன் மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி ஆகிய மொழி திரைப்படங்களிலும் தோன்றியுள்ளார் இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக கமலஹாசன் கருதப்படுகிறார். இது மட்டுமல்லாமல் இந்திய திரைப்படத் துறையில் பல புதிய திரைப்பட தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்பு நுட்பங்களை அறிமுகப்படுத்தியவர் கமலஹாசன்.

   

1960 ஆம் ஆண்டு தனது ஐந்து வயதில் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையை தொடங்கிய கமலஹாசன் அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக ஜனாதிபதியின் தங்க பதக்கத்தை வென்றார். அதற்கு பிறகு பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் கமலஹாசன்.

 

தனது நடிப்பிற்காக நான்கு தேசிய திரைப்பட விருதுகள், 9 தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், நான்கு நந்தி விருதுகள், ஒரு ராஷ்டிரபதி விருது மற்றும் 18 பிலிம்பேர் விருதுகள், தென்னக விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். இது மட்டுமல்லாமல் கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய விருதுகளையும் வென்றவர் கமலஹாசன்.

ஆரம்ப கட்டத்தில் 16 வயதிலேயே திரைப்படத்தின் மூலம் கமலஹாசனும் ரஜினியும் இணைந்து நடிக்க தொடங்கினர். அவர்கள் இருவரும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தனர். அனைத்தும் ஹிட் படங்கள் ஆனது. மக்கள் அவர்களை விரும்பினர். ஆனாலும் ஒரு கட்டத்திற்கு பிறகு கமலஹாசன் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்க மறுத்துவிட்டாராம். ஏனென்றால், ரஜினிகாந்த் அவர்களை நேரில் அழைத்து நாம் இருவரும் ஒன்றாக நடித்தால் நீங்கள் ஹீரோவாக வளர முடியாது. அதனால் இனிமேல் நீங்கள் ஹீரோவாக நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும். இருவரும் தனித்தனி பாதையில் சென்று நடிக்க வேண்டும் என்று கூறி ரஜினியுடன் இணைந்து நடிப்பதை அன்போடு மறுத்துவிட்டாராம் கமலஹாசன்.