சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 டைட்டில் வின்னரா இது?.. ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாரே.. லேட்டஸ்ட் கிளிக்..!!

By Nanthini on புரட்டாதி 8, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் என்றும் ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதிலும் விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி பல வருடங்களாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகின்றது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சி ஜூனியர் மற்றும் சீனியர் என்று இரண்டு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது.

   

மேலும் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக ஏராளமான பேருக்கு வெள்ளித் துறையில் பொறுப்புகள் கிடைத்துள்ளன. இன்னும் சொல்லப்போனால் இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலமாக உள்ளது. அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 9 நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

   

 

இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக ஸ்வேதா மோகன் மற்றும் அனுராதா ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முதல் ரன்னர் அப் பட்டதை பிரியா ஜெர்ஷன் பெற்றார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிரியா ஜெர்ஷன், ஒரு சில திரைப்படங்களில் மற்றும் ஆல்பம் பாடல்கள் பாடியிருக்கிறார். இவருக்கு சமீபத்தில் தான் நீண்ட நாள் காதலன் சார்லி ஜாய் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது.

இந்த நிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் தான் சிறுவன் ஹ்ரித்திக். இவருக்கு 50 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. தற்போது அவர் சூப்பர் சிங்கர் பிரியா ஜெர்ஷன் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அதில் அவர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.