பிரபல இசையமைப்பாளரான ஜி. வி பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, மாரி செல்வராஜ் சாரோட வாழை படத்தை பார்த்தேன். அவரோட அரசியலும் சரி, அவரோட வாழ்வியலும் சரி சூப்பரா படத்துல சொல்லி இருக்காரு. அவரோட லைஃபை வச்சு ஒரு பியூட்டிஃபுல்லான படத்தை எடுத்து இருக்காரு. ஒரு கிளாசிக் படத்தை எடுத்திருக்காரு.

அவரோட பயோ பிக்னு கூட அந்த படத்தை சொல்லலாம். அவர் மனசுல என்னென்ன பாதிப்புகள் இருக்கோ அந்த பாதிப்புகளை படத்தின் மூலமா ஆடியன்ஸுக்கு கொடுத்திருக்கிறார். படத்தை பார்க்கும் போது எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு. இந்த மாதிரி படத்தை எங்களுக்கு சீக்கிரம் போட்டு காமிச்சதுக்கு மாரி செல்வராஜ் சாருக்கு ரொம்ப நன்றி. படத்தோட நடிகர்கள், சந்தோஷ் நாராயணன் இசை எல்லாமே ரொம்ப பக்காவா இருந்துச்சு.

ஆர்டிஸ்ட் எல்லாருமே சூப்பரா நடிச்சிருந்தாங்க. அவங்களோட கதாபாத்திரம் நம்ம மனசுல பதிஞ்சு நிக்குது. அந்த அளவுக்கு படம் சூப்பரா இருந்துச்சு. கண்டிப்பா இந்தியன் சினிமாவில் இது ஒரு முக்கியமான படமா இருக்கும். இதோட பாதிப்பு ஆடியன்ஸ்க்கு போகவே செய்யாது. அவர் மனசுல என்ன விஷயம் இருந்ததோ அதை ஆடியன்ஸ் கிட்ட கரெக்டா பதிவு பண்ணிட்டாரு.

படத்துல வேலை பார்த்த கேமரா மேன், எடிட்டர், ப்ராஜெக்ட் டைரக்டர் எல்லாருமே ஹார்ட் ஒர்க் பண்ணி இருக்காங்க. ஒருத்தரை மட்டும் நோட் பண்ணி சொல்ல முடியாது. எல்லாருமே சூப்பரா நடிச்சிருக்காங்க. எல்லாரும் கண்டிப்பா வாழை படத்தை பார்க்கணும் என ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி ரிலீசான வாழை திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகிய வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.

