பிரபல நடிகையான சாய் பல்லவி மலையாளத்தில் ரிலீசான பிரேமம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். முதல் படத்திலேயே இவர் ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார். அவரது எதார்த்தமான பேச்சு, எளிமை, அழகுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சாய் பல்லவியின் சொந்த ஊர் ஊட்டி அருகே இருக்கும் கோத்தகிரி.

தமிழில் கார்கி, மாரி 2, என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் சாய் பல்லவி நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

வருகிற அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி அமரன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதே நேரம் தெலுங்கில் நாக சைதன்யா உடன் இணைந்து தண்டல் திரைப்படத்திலும் சாய் பல்லவி நடித்து வருகிறார். மேலும் பாலிவட்டில் சரித்திர கதை அம்சம் கொண்ட படத்தில் ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய்பல்லவி சீதையாகவும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சாய்பல்லவி ஒரு பேட்டியில் கலந்து கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் நீங்கள் பார்க்க ஆசைப்படும் நபர் யார் என கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு பதில் அளித்த சாய் பல்லவி எனக்கு ரத்தன் டாட்டாவை மீட் பண்ணனும்னு ஆசை. ஒரு 2 வருஷமா எனக்கு அந்த ஆசை இருக்கு. அவர ஒரு டைம் ஆவது மீட் பண்ணனும் என கூறியுள்ளார்.

