தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த மீனா மற்றும் அர்ஜுன் நடித்த வெளியான திரைப்படம் தான் ரிதம். கடந்த 2000 ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் ஜோதிகா, லக்ஷ்மி, நாகேஷ், மணிவண்ணன், ரமேஷ் அரவிந்த் உள்ளிட்ட நடிகர்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வசந்த் இயக்கிய இந்த படத்தில் நடிகை மீனாவுக்கு சிறந்த நடிகைக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது வழங்கப்பட்டது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்த நிலையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் கொடுத்தன.

இந்த நிலையில் விதம் திரைப்படத்தில் ஜோதிகா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்த நடிகை பற்றிய செய்தி தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் சிறிய காட்சியில் ஜோதிகா நடித்தாலும் படம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை விந்தியா தானாம். சங்கமம் படத்தின் மூலம் அறிமுகமான விந்தியா முதலில் ரிதம் படத்தில் நடிக்க இருந்தார்.

சென்னையில் ஒரு பார்ட்டிக்கு தன்னுடைய உறவினர்களுடன் வந்த அவரை அர்ஜுன் பார்த்து வசந்திடம் கூறியுள்ளார். உடனே அங்கு விந்தியாவை சில புகைப்படங்களை எடுத்து பிரமிடு நடராஜனிடம் போய் வசந்த் கொடுத்துள்ளார். ரிதம் திரைப்படத்தில் ஜோதிகா கதாபாத்திரத்திற்கு இவர் தான் நடிக்கப் போகிறார் என்று சொல்லி இருக்கிறார். அந்த சமயத்தில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பிரமிடு நடராஜனை பார்க்க வர அவர் டேபிளில் இருந்த விந்தியாவின் புகைப்படத்தை பார்த்து என்னுடைய படத்திற்கு ஒரு புது நடிகையை தான் தேடிக் கொண்டிருக்கிறேன், இவர் சரியாக இருப்பார் என்று கூறியுள்ளார்.

உடனே வசந்த் நான் இவரை அறிமுகம் செய்யப் போகிறேன் ரிதம் திரைப்படத்தில் இவர்தான் நடிக்க போகிறார் என்று கூறியுள்ளார். உடனே விந்தியாவிடம் சுரேஷ் கிருஷ்ணா அந்தப் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறீர்களா அல்லது ஹீரோயினியாக என் படத்தில் அறிமுகமாக போகிறீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் என்னை முதலில் போட்டோ எடுத்தது வசந்த் தான் அவர் படத்தில் ஏன் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேச்சு நடந்து கொண்டிருந்த சமயத்தில் இறுதியாக வசந்த், சுரேஷ் கிருஷ்ணா வே அவரை அறிமுகம் செய்யட்டும் என்று விட்டுக் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தான் சங்கமும் திரைப்படத்தில் விந்தியா முதல் முதலில் அறிமுகமானார். அது மட்டுமல்லாமல் அந்த படத்தில் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் தரப்பட்டுள்ளது.
