சிக்கன் சாப்பிடுற மாதிரிதான் இதையும் சாப்பிடுறேன்… இதைச் சொல்ல எனக்கு பயமோ தயக்கமோ கிடையாது… ஓபனாக பகிர்ந்த துஷரா விஜயன்…

By admin on ஆவணி 20, 2024

Spread the love

திண்டுக்கல்லில் பிறந்தவர் நடிகை துஷரா விஜயன். இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகை ஆவார். இவர் பொறியியல் படிப்பையும் ஃபேஷன் படிப்பையும் படித்துள்ளார். நடிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டு மாடலாகவும் இருந்து வந்துள்ளார் துஷரா விஜயன்.

2019 ஆம் ஆண்டு போதை ஏறி புத்தி மாறி என்ற தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் துஷரா விஜயன். பின்னர் நடிகர் ஆர்யாவுடன் ஜோடியாக சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

   

#image_title

   

கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்ட துஷரா விஜயன் தனது அபாரமான நடிப்பை சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் காண்பித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இதன் மூலம் அவருக்கு பல சினிமா வாய்ப்புகள் கிடைத்தது.

 

2021 ஆம் ஆண்டு நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் நடித்தார் துஷரா விஜயன். தற்போது தனுஷ் இயக்கிய ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் துஷரா விஜயன். தனது நடிப்பிற்காக JFW விருது, கலாட்டா கிரௌன் விருது, தமிழ் நட்சத்திர விருது, ஓடிடி ப்ளே விருது ஆகியவற்றை வென்றவர்.

#image_title

ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட துஷரா விஜயன் பீப் சாப்பிடுவதை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறியது என்னவென்றால் நான் சிக்கன் சாப்பிடுவது மாறியே தான் பீப்பை சாப்பிடறேன். இதுல என்ன தப்பு இருக்கு. சமூக அக்கறை இருக்கிறவங்க யாருமே இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்கவே மாட்டாங்க. நான் பீப் சாப்பிடுவேன்னு சொல்றதுல எனக்கு எந்த பயமும் தயக்கமும் இல்லை என்று கூறியிருக்கிறார் துஷரா விஜயன்.