மைசூர் சமஸ்தானம் மாண்டியா மாவட்டத்தில் மேல்கோட்டை ஊரில் பிறந்தவர் ஜெயலலிதா. அவரது மூதாதையர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். ஜெயலலிதாவிற்கு இரண்டு வயதாக இருக்கும் பொழுதே அவரது தந்தை ஜெயராம் காலமானார். அதன் பின்னர் ஜெயலலிதாவின் தாயார் சினிமாவிற்குள் வந்து தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டு சில படங்களில் நடித்தார். பள்ளிப்படிப்பை முடிக்கும் முன்பே ஜெயலலிதாவுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பின்னர் ஜெயலலிதா வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கிட்டத்தட்ட 127 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் ஜெயலலிதா. எம்ஜிஆர் உடன் மட்டுமே இணைந்து 28 படங்களில் நடித்துள்ளார். மேலும் சிவாஜி கணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன், சிவகுமார், ஏவிஎம் ராஜன், என்டி ராமராவ், அக்கினேனி நாகேஸ்வரராவ், தர்மேந்திரா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்தவர் ஜெயலலிதா.

#image_title
மக்கள் பலரும் ஜெயலலிதாவின் நடிப்பை வெகுவாக ரசித்தார்கள். இவரை கலைச்செல்வி என்று அன்போடு அழைத்தார்கள். எம்ஜிஆர் அவர்களுடன் இவர் இணைந்து நடித்த அனைத்து படங்களும் ஹிட் ஆனது. கெமிஸ்ட்ரி என்றால் அது எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு தான் கச்சிதமாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் பேச ஆரம்பித்தன. அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஜெயலலிதா ஜோடி பிரபலம் அடைந்தது.
பின்னாளில் கட்சி தொடங்கிய எம்ஜிஆர் அவர்களுடன் இணைந்து பணியாற்ற தொடங்கிய ஜெயலலிதா முழுவதுமாக அரசியலில் இயங்கி தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆனார். தமிழக முதலமைச்சராக ஆறுமுறை பதவி வகித்தவர் ஜெயலலிதா. பெண்களுக்காக பல நலத்திட்ட உதவிகளை ஆரம்பித்து நாட்டிற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து மறைந்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதா சினிமாவில் நுழைவதற்கு முன்பு கல்லூரியில் படிக்க ஆசைப்பட்டார். அப்படி கல்லூரிக்கு செல்லும் போது நடந்த ஒரு கசப்பான அனுபவத்தால் ஜெயலலிதா கல்லூரி படிப்பையே கைவிட்டு விட்டார். அப்படி நடந்தது என்னவென்றால், பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்த ஜெயலலிதாவுக்கு கல்லூரியில் எளிதாக சீட்டு கிடைத்தது. அவரது தோழியுடன் இணைந்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படிப்பதற்காக இணைந்தார் ஜெயலலிதா. அப்படி ஒரு நாள் கல்லூரி வகுப்பிற்கு புத்தகம் இல்லாமல் ஷூட்டிங் முடித்தவுடன் நேராக கல்லூரிக்கு சென்றார் ஜெயலலிதா.

#image_title
அப்போது அங்கே வகுப்பிற்கு லேட் ஆக சென்ற ஜெயலலிதாவை அங்கு வகுப்பு நடத்திக் கொண்டிருந்த சுசிலா மேரி என்ற பேராசிரியை கடுமையாக திட்டியதோடு மட்டுமல்லாமல் புத்தகம் இல்லாமல் கல்லூரிக்கு ஏன் வரீங்க என்று சொல்லி கத்தியுள்ளார். இதனால் வருத்தம் அடைந்த ஜெயலலிதா அதற்கு பின்பு கல்லூரி பக்கமே போகவில்லையாம். அதோடு பட சூட்டிங்கில் படு பிஸியாகிவிட்டதால் படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார் ஜெயலலிதா.
