ALERT: உங்களுக்கு இது மாதிரி மெசேஜ் வருதா?.. கிளிக் பண்ணா மொத்தமும் காலி.. அரங்கேறும் புதிய வகை மோசடி..!!

By Nanthini on ஆவணி 19, 2024

Spread the love

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு பக்கம் சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக அரசு மக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

   

 

   

அதன்படி தற்போது புதுவிதமான மோசடி நடைபெறுவதாக சைபர் கிரைம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஐடி ரீபண்டுக்காக காத்திருப்பவர்களை குறி வைத்து டிஜிட்டல் பண மோசடி கும்பல்கள் களம் இறங்கி உள்ளதாக தெரிகிறது. ரீஃபண்ட் பெறுவதற்கு ஒப்புதல் அளிப்பதாக கூறி கிரெடிட் கார்டு போன்ற தகவல்களை கேட்டு மெசேஜ்களை சிலர் அனுப்புகிறார்கள்.

 

அதில் உள்ள லிங்கை கிளிக் செய்தால் கணக்கில் இருந்து பணத்தை உரியவருக்கு தெரியாமல் திருடி விடுகிறார்கள். எனவே ஐடி பெயரில் வரும் மெசேஜ்களை ஓபன் செய்யாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய மோசடிகளுக்குப் பலியாவதைத் தவிர்க்க, வரி செலுத்துவோர் அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் தகவல் தொழில்நுட்பத் துறையின் எந்தவொரு தகவல்தொடர்புகளையும் சரிபார்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.