தசாவதாரம் படத்தில் நடித்ததால் எனக்குப் பல பட வாய்ப்பு பறிபோனது… பாடல் ஆசிரியர் கபிலன் பகிர்ந்த ஆச்சர்யத் தகவல்!

By vinoth on ஆவணி 17, 2024

Spread the love

தமிழ் சினிமா பாடல் ஆசிரியர்களில் மிகவும் தனித்துவம் மிக்க ஒருவர் பாடல் ஆசிரியர் கபிலன். 2000 களின் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை பிஸியான பாடல் ஆசிரியராக வலம் வந்துகொண்டிருக்கிறார். விஜய்க்கு அறிமுக குத்து பாடல் எழுதினாலும், அழகான மெலடி எழுதினாலும் இரண்டிலும் தன்னுடைய முத்திரையைப் பதிப்பார்.

இளையராஜா முதல் தற்போதைய அனிருத், ஷான் ரோல்டன் வரை அனைவருக்கும் பாடல் எழுதியுள்ள கபிலன், கமல்ஹாசன் மூலமாக தமிழ் சினிமாவுக்குள் அழைத்து வரப்பட்டவர்களில் ஒருவர். பாண்டிச்சேரியை சேர்ந்த அவர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலை பார்த்த அவருக்கு அதன் மூலமாக சினிமாக்காரர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது.

   

அப்போது அவர் எழுதிய கவிதைகளைப் படித்த கமல்ஹாசன் அவரிடம் பழக ஆரம்பித்துள்ளார். அப்படிதான் அவருக்கு தெனாலி பட வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதன் பின்னர் அவர் வித்யாசாகர் இசையில் பல ஹிட் பாடல்களைக் கொடுத்து முன்னணி பாடல் ஆசிரியர் ஆனார்.

   

இதற்கிடையில் பிஸியான பாடல் ஆசிரியராக இருந்த அவரை தன்னுடைய தசாவதாரம் திரைப்படத்தில் நடிக்க வைத்தார் கமல்ஹாசன். அந்த படத்தில் அவர் பாடல் ஆசிரியர் கபிலனாகவே நடித்தார்.இந்த படத்தில் நடிக்க முதலில் கபிலன் தயங்கினாராம். ஆனால் கமல்ஹாசன் உங்களுக்கு கஷ்டமான பாத்திரம் எல்லாம் இல்லை. நீங்கள் நீங்களாகவேதான் வரப் போகிறீர்கள் என்று சொல்லி நடிக்க வைத்துள்ளார்.

 

ஆனால் அந்த படத்தில் நடிக்க சென்றதால் பல பெரிய படங்களில் பாடல் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கைவிட்டு போயுள்ளது. அதில் சிவாஜி, அழகிய தமிழ்மகன் போன்ற படங்களும் அடக்கமாம். தான் நடிக்க சென்றுவிட்டதால் அந்த சமயத்தில் அவரை யாரும் பாடல் எழுத அழைக்கவில்லை எனக் கபிலன் வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.