ஜீன்ஸ் படத்துல “பூவுக்குள் ஒளிந்திருக்கும்” பாடலை இப்படித்தான் படமாக்கினோம்… இனி அந்த மாதிரி எடுக்க முடியாது… பிரஷாந்த் பகிர்வு…

By admin on ஆவணி 15, 2024

Spread the love

டாப் ஸ்டார் பிரசாந்த் உச்சகட்டத்தில் இருந்த காலகட்டம் அது. 1998 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஜீன்ஸ். இப்படத்தில் பிரசாந்துடன் ஐஸ்வர்யா ராய், லட்சுமி, ராதிகா சரத்குமார், நாசர், செந்தில் மற்றும் ராஜசுந்தரம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர்.

ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட விலையுயர்ந்த திரைப்படம் ஆகும். இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. வணிக ரீதியாகவும் வசூல் சாதனை படைத்தது. நடிகர் பிரசாந்திற்கு ஜீன்ஸ் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது மட்டுமல்லாமல் அவரது கேரியரில் முக்கியமான இடத்தை பிடித்தது.

   

   

இப்படத்தில் பிரசாந்த் இரட்டை வேடங்களிலும், ஐஸ்வர்யாராய் இரட்டை வேடங்களிலும் நடித்திருப்பர். இந்த திரைப்படம் நான்கு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், சிறந்த இசையமைப்பாளருக்கான ஃபிலிம் ஃபேர் விருது, சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது ஆகியவற்றை வென்றுள்ளது. சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான அகாடமி விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ பரிந்துரையாக ஜீன்ஸ் படம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

இப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்துமே மெகா ஹிட் ஆனது. அதிலும் பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் என்ற பாடலை உலகத்தில் உள்ள ஏழு அதிசயங்களுக்கும் சென்று படப்பிடிப்பு செய்து ஏழு அதிசயங்களையும் ஒரே பாடலில் காட்டியிருப்பார் இயக்குனர் சங்கர். இந்தப் பாடல் அந்த நேரத்தில் பட்டி தொட்டி எங்கும் பரவி மிகவும் புகழ் அடைந்தது. அதில் உலகின் ஏழு அதிசயங்களை மட்டுமல்லாமல் ஏழு அதிசயங்கள் உள்ள நாடுகளை சேர்ந்த ராணிகளின் தோற்றத்தை வைத்து ஐஸ்வர்யா ராய்க்கு கெட்டப்பை வழங்கி இருப்பர். அதுவும் மிகவும் பிரபலமானது. இந்த பாடலுக்கு பின்னால் ஒரு சுவாரசியமான கதையும் இருக்கிறது. பிரசாந்த் சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் கூறியது என்னவென்றால், ஜீன்ஸ் படம் ரொம்ப பிரம்மாண்டமாக சங்கர் இயக்கியிருந்தார். அதில் பூவுக்குள் ஒளிந்திருக்கும் பாடலை ரொம்ப கஷ்டப்பட்டு நாங்க படம் ஆக்கினோம். ஏழு அதிசயங்களுக்கும் சென்று 15 நாட்கள் அந்த ஒரு பாடல் மட்டுமே படம் எடுக்கப்பட்டது. இன்றைய காலகட்டதில் அந்த மாதிரி ஒரு பாடலை யாராலும் உருவாக்க முடியாது. படமாக்கவும் முடியாது. ஏனென்றால் தற்போதைய காலகட்டத்தில் அந்த மாதிரி ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என்றால் 400 கோடி 500 கோடி செலவாகும் என்று பகிர்ந்துள்ளார் பிரசாந்த்.