பிரபல நடிகரான அருள்நிதி வம்சம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தனது பயணத்தை ஆரம்பித்தார். அருள்நிதி மௌனகுரு, தகராறு, டிமான்டி காலனி, ஆறாது வசனம், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு டிமான்டி காலனி படம் ரிலீஸ் ஆனது.

இயக்குனர் அஜய் ஞானமுத்து டிமாண்டி காலணி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ளார். ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இன்று டிமாண்டி காலணி 2 படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது.

இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் விஜே அர்ச்சனா. அவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் தேன்மொழி பி. ஏ, இந்திரா உள்ளிட்ட சீரியல்களிலும் அர்ச்சனா நடித்துள்ளார். இப்போது டிமாண்டி காலனி இரண்டாவது பாகத்தில் அர்ச்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிகளும் அர்ச்சனா போட்டியாளராக பங்கேற்று டைட்டிலை வென்றார். இன்று அர்ச்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டிமான்டி காலனி 2 படம் ரிலீஸ் ஆகிறது. இதனால் நரிக்குறவர் என மக்களுக்கு வி.ஜே அர்ச்சனா தனது சொந்த செலவில் டிக்கெட் வாங்கி கொடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram
