ஹாலிவுட் இயக்குனர்களுக்கு மட்டுமே அந்த நுட்பம் வரும்… அது பாரதிராஜாவுக்கு இருக்கு –MR ராதா கொடுத்த பாராட்டு!

By vinoth on ஆவணி 15, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். அப்படிதான் அவர் தன்னுடைய கிழக்கே போகும் ரயில் படத்துக்கே பொருத்தமாக இருப்பார் என்று சுதாகரைத் தேர்வு செய்துள்ளார். அதற்கு முன்னர் அந்த படத்தில் நடிக்க சிரஞ்சீவி கூட ஆடிஷனுக்கு வந்தாராம். ஆனால் அவரை கூட நிராகரித்துள்ளார்.

   

அதே போலதான் பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகைகளில் இன்றளவும் கொண்டாடப்படும் நடிகை என்றால் அது ராதிகாதான். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பல்வேறு துறைகளில் ஜொலித்து வரும் அவர் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட போட்டியிட்டு தோற்றார்.

   

அவரை அறிமுகப்படுத்திய சம்பவத்தைப் பகிர்ந்துள்ள பாரதிராஜா “நான் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்துக்காக ஒப்பந்தம் செய்திருந்த நடிகை வேறு படத்துக்கு சென்றார். அதனால் திடீரென்று ஒரு புதிய கதாநாயகியை தேர்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

 

அப்போதுதான் ராதிகா பற்றி தெரியவந்துள்ளது. அப்போது அவர்தான் எம் ஆர் ராதா மகள் என்று தெரியாது. போய் ஆடிஷன் செய்த பிறகு எம் ஆர் ராதாவிடம் அழைத்துச் சென்றார்கள். அப்போது அவர் என்னுடைய 16 வயதினிலே படத்தைப் பார்த்திருந்தார். அப்போது அவர் சொன்னார். யாருக்கு எப்படி க்ளோஸ் அப் வைக்கணும் என்று ஹாலிவுட் காரணுக்குதான் தெரியும். அதுக்கப்புறம் பாரதிராஜாவுக்குதான் அது நல்லா தெரியுது என்று சொன்னார். எம் ஆர் ராதா யாரையு அவ்வளவு சீக்கிரம் பாராட்ட மாட்டார். அவரே என்னை அப்படி பாராட்டினார்” எனக் கூறியுள்ளார்.