80-களில் ஆரம்பித்து இப்போது வரை தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறப்பவர் இசைஞானி இளையராஜா. இதுவரை இளையராஜா ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இசைஞானியின் வாழ்க்கை வரலாறு படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார். அதனை அருண் மாதேஸ்வரன் இயக்க கமல்ஹாசன் திரைக்கதை எழுதுகிறார். எம்.எஸ் விஸ்வநாதனுக்கு பிறகு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் இளையராஜா தான்.

அன்னக்கிளி படத்தில் இளையராஜா இசையமைத்த பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். ஆரம்பத்தில் 5 ஆயிரம் 10 ஆயிரம் என ஆரம்பித்து இளையராஜா அந்த காலகட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கி உள்ளார். ஒரு முறை இயக்குனர் பாக்கியராஜ் தான் இயக்கிய தாவணி கனவுகள் படத்திற்கு இசையமைக்க இளையராஜாவிடம் கேட்டுள்ளார்.

அப்போது இளையராஜா ஒரு லட்ச ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பாக்யராஜ் இப்படி சம்பளத்தை உயர்த்திட்டிங்களே? என கேட்டுள்ளார். உடனே இசைஞானி இளையராஜா மியூசிக் தெரியாமல் ஒருத்தன் ஒரு லட்சம் வாங்கும்போது நான் கேட்க கூடாதா என பாக்யராஜிடம் கேட்டாராம் இளையராஜா மறைமுகமாக திட்டியது டி.ராஜேந்தரை தான் என செய்திகள் உலா வருகிறது.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை என அனைத்திலும் டி.ராஜேந்தர் பட்டையை கிளப்புவார். அவர் இசை அமைத்த பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. தனது படங்களுக்கு மட்டும் இல்லாமல் டி.ராஜேந்தர் மற்ற படங்களுக்கும் இசையமைத்து கொடுத்து ஒரு லட்ச ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளார். அதைத்தான் இளையராஜா சுட்டி காட்டி பேசியிருப்பார் என கூறப்படுகிறது. ஆனால் எது உண்மை என்பது தெரியவில்லை.

