விஜய் இப்படி பன்னுவாருனு நினைச்சு கூட பார்க்கல ….மனம் திறந்து பேசிய இயக்குனர் மாரிசெல்வராஜ் …

By santhoshinikarthik on ஆவணி 9, 2024

Spread the love

தமிழ் திரை உலகின் டாப் ஹீரோ தான் தளபதி விஜய் .தற்பொழுது  பிரேம்ஜி இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து தளபதி 69 என்ற படத்தை ஹெச் வினோத் இயக்க இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர் .

   

இந்நிலையில் தளபதி 69 படம் தான் விஜய் நடிப்பில் உருவாகும் கடைசி படம் என்றும் தெரிவித்து இருக்கின்றனர் .அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பாக  அரசியலில் ஈடுபட்டுள்ள நடிகர் விஜய் கட்சி ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.

   

 

ஆகவே தனது கட்சியின் முன்னேற்றத்திற்காக முழு நேரத்தையும் செலவிட போவதாக அவர் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் சிறு வயதிலிருந்தே மிகவும் பிடித்த நடிகராக இருந்தவர் விஜய் தான் என்று இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். மேலும் நான் இயக்குனராக அறிமுகமானதும் அவரிடம் பல படங்களுக்கான கதையை கூறியதாகவும் தெரிவித்துள்ளார் .

ஆனால் தற்பொழுது விஜய் இனி படத்தில் நடிக்கப் போவதில்லை என்று வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .. தளபதி விஜய் வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறாமலேயே போய் விட்டது என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

தளபதி படத்தில் நடிப்பதை கைவிடுவார் என்று நான் சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை என்று மாரி செல்வராஜ் உருக்கமாக கூறியுள்ளார்..