அந்தகன் முதல் மின்மினி வரை.. நாளை ரிலீஸ் ஆகும் படங்கள்.. Comeback கொடுப்பாரா பிரசாந்த்..!!

By admin on ஆவணி 8, 2024

Spread the love

அந்தகன்:
டாப் ஸ்டார் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தகன் திரைப்படத்தில் ஹீரோவாக மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தை பிரசாந்தின் தந்தையும் பிரபல இயக்குனருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். மேலும் பிரியா ஆனந்த், வனிதா, சமுத்திரகனி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அந்தகன் படத்தோட ஸ்பெஷலே அதுதானாம்... அப்பாவைப் பற்றி அப்படி சொன்ன பிரசாந்த் | what is the special matter in andhagan movie?

   

மின்மினி:
மின்மினி திரைப்படத்தை ஹலீதா ஷமீம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் எஸ்தர் அணில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஹலீதா சமயம் ஏற்கனவே சில்லு கருப்பட்டி, பூவரசன் பீப்பீ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இந்த நிலையில் மின்மினி திரைப்படத்தின் மூலம் ஏ.ஆர் ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆக உள்ளார்.

   

ஆக. 9ந் தேதி வெளியாகும் மின்மினி படம்

 

வீராயி மக்கள்:
வீராயி மக்கள் திரைப்படத்தில் மறைந்த நடிகர் மாரிமுத்து நடித்துள்ளார். வேலராமமூர்த்தியும், மாரிமுத்துவும் அண்ணன் தம்பியாக இந்த படத்தில் நடித்துள்ளனர். நாகராஜ் கருப்பையா இயக்கிய படத்தை ஏ வைட் ஸ்கிரீன் பிலிம் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் தீபா சங்கர், சுரேஷ் நந்தா, ரமா, ஜெரால்டு மில்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வீராயி மக்கள் திரைப்பட இசை வெளியீட்டு விழா !! – NBA 24X7

கவுண்டம்பாளையம்:
ரஞ்சித் இயக்கத்தில் கவுண்டம்பாளையம் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அலிபா, அனீஸ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆனந்த கொலை மற்றும் நாடகக் காதலை மையப்படுத்தி படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

லைட் ஹவுஸ்:
ஸ்ரீ கிருஷ்ணா இயக்கத்தில் லைட் ஹவுஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் தலைவாசல் விஜய், வித்யா பிரதீப், விக்னேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

P-2 இருவர்:
சிவம் எழுதி இயக்கிய P-2 இருவர் திரைப்படத்தில் மனோஜ் ஹீரோவாக நடித்துள்ளார். சித்து ஹீரோயினாக நடித்துள்ளார். இளவரசி, ராஜசிம்மன், தீபா, சித்தா தர்ஷன், ரமேஷ், சந்தோஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

P2 Iruvar From August 9 | P 2 - இருவர் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர்  வெளியீட்டு விழா | Movies News in Tamil

பார்க்:
இ.கே முருகன் இயக்கத்தில் தமன் குமார் நடிப்பில் பார்க் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஸ்வேதா ஹீரோயினாக நடித்துள்ளார். காதல், ஆக்ஷன், காமெடி, டூயட் ஆகியவை கலந்து பார்க் திரைப்படம் உருவாகியுள்ளது.

பார்க்.. இது ஹாரர் படம்தான்.. ஆனா வேற மாறி வேற மாறி.. பர்ஸ்ட் லுக்கை  வெளியிட்டார்.. ஜி.வி பிரகாஷ் - Thentamil

சூரியனும் சூரியகாந்தியும்:
இயக்குனர் ஏ.எல் ராஜா இயக்கத்தில் சூரியனும் சூரியகாந்தியின் திரைப்படம் வருவாயுள்ளது. இந்த படத்தில் அப்பு குட்டி, ஸ்ரீ ஹரி, விக்ரம் சுந்தர் ஆகியோர் நடித்துள்ளனர்.

சூரியனும் சூரியகாந்தியும்' திரைப்படத்தில் காது கேளாத இளைஞர் கதாநாயகனாக  நடித்திருக்கிறார்! – Chennai Editor