தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற நடிகர் MGR. அவர் நடிகராக மட்டுமல்லாமல் தமிழக முதலமைச்சராகவும் இருந்தவர். தமிழ்நாடு மக்களே தூக்கி கொண்டாடிய ஒரு நபர் என்றால் அது எம்ஜிஆர் அவர்கள் தான். அவருக்கு இருந்தது ரசிகர்கள் மட்டுமல்ல பக்தர்கள் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கு படைத்தவர் எம்ஜிஆர்.
காதல் ஆக்சன் திரைப்படங்களில் நடித்து பிரபலமான எம்ஜிஆர், ஆரம்பத்தில் சிறு நாடகத்தில் நடித்ததற்கு மூலமாகவே சினிமாவிற்குள் வந்தார். அவர் ஒரு நடிகர் மட்டுமல்லாமல் ஒரு இயக்குனர் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம். 1973 ஆம் ஆண்டு வெளியான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தை எம்ஜிஆர் அவர்களே தயாரித்து இயக்கி நடிகனாகவும் நடித்துள்ளார். இப்படம் மிகப்பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்டது. அப்போதைய ஆளுங்கட்சியாக இருந்த திமுக சுவரொட்டி விளம்பரங்களுக்கு வரியை உயர்த்தியமையால் அந்த காலத்தில் சுவரொட்டிகள் இல்லாமல் எந்த விளம்பரமும் இல்லாமல் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். மேலும் மஞ்சுளா, லதா, சந்திரகலா, எம் என் நம்பியார், அசோகன்,, நாகேஷ், தேங்காய் சீனிவாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் தான் நடிகை லதா தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
நடிகை லதாவிற்கு அறிமுகமாகும் முதல் படத்திலேயே மிகப்பெரிய நடிகரான எம்ஜிஆர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுவும் நடிகர் எம் ஜி ஆர் ஆக மட்டுமல்லாமல் இயக்குனர் தயாரிப்பாளராகவும் இருந்தது அவருக்கு கூடுதல் சிறப்பாக அமைந்தது. ஆனால் முதல் படம் என்பதால் லதா எம் ஜி ஆர் அவர்களைப் பார்த்து மிகவும் பயந்தாராம்.

எம்ஜிஆர் இயக்கிக் கொண்டிருக்கையில் அவரைப் பார்த்து பயந்த லதா, சரியாக நடிக்காமல் அதிக டேக்குகளை வாங்கிக் கொண்டே இருந்திருக்கிறார், இதனால் மிகுந்த கோபம் அடைந்துள்ளார் எம் ஜி ஆர். MGR லதாவிடம் சென்று ஏன் சரியாக நடிக்காமல் இத்தனை டேக்குகள் எடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு லதா எனக்கு மிகவும் டென்ஷனாக உள்ளது. உங்களை பார்த்தால் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் யோசித்துக் கொண்டே லதாவிடம் ஒரு சீக்ரெட்டை கூறியிருக்கிறார்.
அப்படி எம்ஜிஆர் சொன்னது என்னவென்றால் லதாவிடம் காதில் சென்று நீங்க ரொம்ப பயப்படுறீங்க அப்படின்னா படத்தின் ஹீரோவை மாத்திடுவோமா என்று எம்ஜிஆர் கேட்டிருக்கிறார். அதை கேட்டதும் சட்டென சிரித்த லதா எம்ஜிஆர் மீது இந்த பயம் குறைந்ததனால் அடுத்தடுத்த காட்சிகளில் ஒரே டேக்கில் நடித்து முடித்து கொடுத்தாராம். அப்படி இயக்குனராகவும் எம்ஜிஆர் யாரிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு சிறப்பாக செயல்பட்டு உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தை இயக்கி அதை வெற்றி படமாக ஆக்கியிருக்கிறார்.
