அத பத்தி யோசிச்சே வாழ்க்கை போகுது.. இயக்குனர் செல்வராகவன் வெளியிட்ட வீடியோ வைரல்..!!

By admin on ஆவணி 7, 2024

Spread the love

பிரபல இயக்குனரான செல்வராகவன் கடந்த 2003-ஆம் ஆண்டு ரிலீசான காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலைகள் தனது பயணத்தை ஆரம்பித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு கடந்த 2004-ஆம் ஆண்டு 7ஜி ரெயின்போ காலனி படத்தை இயக்கினார். பின்னர் 2006-ஆம் ஆண்டு புதுப்பேட்டை படத்தை இயக்கி திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தினார். இப்போது தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்திலும் செல்வராகவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நிம்மதியாக இருந்த நாட்களை பொருட்படுத்துவதில்லை - இயக்குனர் செல்வராகவன் பதிவு | Tamil cinema director selvaraghavan post goes viral

   

இந்த நிலையில் செல்வராகவன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, காலைல எழுந்த உடனே நம்ம யோசிக்கிறது பிரச்சனைய பத்தி தான். தினமும் பிரச்சனை பற்றியே யோசிச்சிட்டு இருந்துட்டு ராத்திரி கனவில் பிரச்சனை பத்தி தான் யோசிக்கிறோம். இதுதான் எல்லாருடைய வாழ்க்கையாகவும் இருக்கு. அவன் அப்படி பண்ணி இருப்பானோ? இவன் இப்படி பண்ணி இருப்பானோ? அது இந்த மாதிரி போயிருக்குமோ எல்லாத்தையும் நினைச்சு நினைச்சு மூச்சு திணற மாதிரி பிரச்சனையை பத்தி மட்டும் தான் யோசிக்கிறோம்.

   

Creeping..! Do you know who Selvaraghavan mentioned celebrity? | புல்லரிக்கிறது..! செல்வராகவன் குறிப்பிட்ட பிரபலம் யார் தெரியுமா?

 

 

ஒரு சத்தியமான உண்மைய சொல்லனும்னா பிரச்சனை அப்படிங்கறது நம்ம மைண்டோட இமேஜினேஷன். நாட்கள் போக போக பிரச்சனை தானா சால்வ் ஆகிடும். அப்போ இதுவரைக்கும் மனச போட்டு அலைக்கழிக்க வைத்தது எல்லாம் வேஸ்ட் தான். பிரச்சனை முடிஞ்சு போச்சு அப்படின்னா கூட உடனே மனசு குதிச்சு வந்து அடுத்து பத்தாயிரம் பிரச்சனையை மூஞ்சில தள்ளும். இதுக்கு என்ன பண்றது? ஒண்ணுமே பண்ண முடியாது. உங்க வீட்ல பூஜை ரூம் இருக்கும். கொஞ்சம் எட்டி பூஜை ரூம பாருங்க. கடவுள் படுத்துகிட்டே உங்களை பார்த்துட்டு இருப்பார். இதெல்லாம் என் பிரச்சனை.

என்னுடைய வாழ்நாளில் நான் கேட்ட சிறந்த கதைகளில் ஒன்று.. இயக்குனர் செல்வராகவன் பதிவு | Tamil cinema director selvaraghavan tweet about fahana movie

நான் பாத்துக்குறேன்டா போய் உன் வேலையை பாருடா அப்படின்னு அவரு டெய்லி சொல்லிட்டு தான் இருப்பார். நீங்க அதை காது கொடுத்து கேட்பதில்லை. உன்ன படைச்சுட்டு உனக்கு இந்த ரோல்ன்னு நான் போட்டு வச்சிருக்கேன். நீ எதுக்கு அனாவசியமா இது அதுன்னு மனசு போட்டு நோண்டிக்குற அப்படின்னு அவர் கத்தி கத்தி பாக்குறாரு. நம்ம கேக்குறது இல்ல. நீங்க பாட்டுக்கு மொத்த பிரச்சனையையும் அவர் தலையில் போட்டுட்டு உங்க வேலைய பாருங்க என பேசியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Selvaraghavan (@selvaraghavan)