கவியரசு கண்ணதாசன் எழுதிய ‘காய்’ பாடலுக்கு டியூன் போட்ட MSV… எச்சரித்த MGR…

By admin on ஆவணி 5, 2024

Spread the love

மனையங்கத் சுப்பிரமணியன் விஸ்வநாதன் என்ற இயற்பெயரை கொண்ட எம் எஸ் வி தென்னிந்தியாவின் பழம்பெரும் இசையமைப்பாளர், பாடகர் மற்றும் நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் சினிமாவில் பணியாற்றியுள்ளார். இவரை மெல்லிசை மன்னர் என்ற புனைபெயரால் அழைக்கப்படுபவர். தமிழ் சினிமாவில் 800க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார் எம் எஸ் வி. முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்கள் எம் எஸ் வி அவர்களுக்கு திரை இசைக்கரவர்த்தி என்ற பட்டத்தை வழங்கினார். மேலும் அவருக்கு 60 தங்க நாணயங்கள் மற்றும் ஒரு புதிய காரும் பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

   

   

ஆரம்பத்தில் எம்எஸ் விஸ்வநாதன் அவர்கள் வயலின் கலைஞர் டி கே ராமமூர்த்தியுடன் இணைந்து 1950 ஆம் ஆண்டு முதல் 1965 ஆம் ஆண்டு வரை விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆக, ஜோடியாக நூறு படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். 1965 முதல் 2015 வரை 700 படங்களுக்கு மேல் சுதந்திரமாக இசையமைத்துள்ளார் எம் எஸ் விஸ்வநாதன். கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றியவர் எம்எஸ் விஸ்வநாதன் அவர்கள் தான்.

 

இசையமைப்பது மட்டுமில்லாமல் எம் எஸ் விஸ்வநாதன் சில படங்களில் நடிகராகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் தன் சொந்த குரலில் பாடல்களையும் பாடியுள்ளார். ஆரம்பத்தில் 1940களில் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த எம்எஸ் விஸ்வநாதன். சி ஆர் சுப்பிரமணியன் இசைக்குழுவில் ஹார்மோனியம் வாசிப்பவராக சேர்ந்து படிப்படியாக முன்னேறி இசையமைப்பாளராக உருவெடுத்தவர் எம் எஸ் விஸ்வநாதன்.

அந்த காலத்தில் சிவாஜி கணேசன், எம்ஜிஆர் அறிமுகமான காலகட்டத்தில் எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்து கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளில் உருவான பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. எம் எஸ் விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் வரிகளில் ஒவ்வொரு பாடல்களையும் கேட்கும் போது அவ்வளவு அர்த்தமுள்ளதாகவும் நம் வாழ்க்கைக்கு தொடர்பு படுத்தியதாகவுமே இருக்கும். பி லீலா, பி சுசிலா, எல் ஆர் ஈஸ்வரி, டி எம் சௌந்தரராஜன், பாடகர் ஜெயச்சந்திரன், எஸ் பி பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம், ஆர் பாலசரஸ்வதி, சீர்காழி கோவிந்தராஜன், ஜேசுதாஸ், சுவர்ணலதா போன்ற முன்னணி பாடகர்களுடன் பணியாற்றியுள்ளார் எம் எஸ் விஸ்வநாதன்.

மெல்லிசை மன்னன் விஸ்வநாதன் அவர்களும் கவியரசு கண்ணதாசனும் ஒவ்வொரு பாடல் உருவாக்குவதற்கு பின்னாடியும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கும். அப்படி 1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த ‘பலே பாண்டியா’ திரைப்படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். அந்த படத்தில் ‘அத்திக்காய் காய் காய்’ என்ற பாடல் இடம்பெற்றிருக்கும்.

இந்த பாடலை எழுதிய பின்பு கவியரசு கண்ணதாசன் எம் எஸ் விஸ்வநாதன் இடம் கொடுத்து மெட்டு போட சொல்லி இருக்கிறார். பாடல் வரிகளை பார்த்த எம்எஸ் விஸ்வநாதன் என்னையா இது ஒரே காய் கறி அப்படினு எழுதி வச்சிருக்கே இதுக்கெல்லாம் என்னால டியுன் போட முடியாது போயா அப்படின்னு சொல்லி இருக்கிறார் எம் எஸ் வி. கவியரசு கண்ணதாசன் அவர்களோ எம் எஸ் வி யை விடாமல் இதுக்கு நீங்க கண்டிப்பா மெட்டு போட்டே ஆகணும் நீங்க மெட்டு போடுங்க இந்த பாடல் ரொம்ப நல்லா இருக்கும் அப்படின்னு சொல்லவே எம் எஸ் விஸ்வநாதன் மெட்டு போட்டு அத்திக்காய் காய் காய் பாடலை உருவாக்கி இருக்கிறார்கள். படமும் வெளியானது பலே பாண்டியா திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றியடைந்து. அத்திக்காய் என்ற பாடல் ஹிட் ஆனது. இந்த பாடலை கேட்ட எம்ஜிஆர் அவர்கள் கவியரசு கண்ணதாசன் அவர்களிடம் எவ்வளவு நல்லா மெட்டு போட்டு இருக்காரு எம் எஸ் வி. எம் எஸ் விஸ்வநாதனை நம்பாதீர்கள், வெறும் தந்தி பேப்பரை கொடுத்தால் கூட அதற்கும் மெட்டு ஒன்றை உருவாக்கி விடுவார் எம் எஸ் வி என்று எம் எஸ் வி ஐ பற்றி பெருமையாக பேசி கண்ணதாசன் அவர்களிடம் எச்சரித்துள்ளார் எம்ஜிஆர்.