நான் நினைச்ச படம் சரியா ஓடல.. இப்ப வரைக்கும் அந்த ஒரு விஷயத்துக்கு தான் பயப்படுவேன்.. ஓப்பனாக பேசிய நடிகர் அருள்நிதி..!!

By admin on ஆவணி 5, 2024

Spread the love

பிரபல நடிகர் ஆன அருள்நிதி வம்சம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், மு.க தமிழரசின் மகனும் ஆவார். அருள்நிதி மௌனகுரு, தகராறு, டிமான்டி காலனி, ஆறாது வசனம், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

   

கடந்த 2015 ஆம் ஆண்டு டிமான்டி காலனி படம் ரிலீஸ் ஆனது. இப்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான டிமான்டி காலனி 2 படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

   

அருள்நிதியின் டிமான்டி 2 படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட படக்குழு விவரம்  உள்ளே - Arulnithi Demonte colony 2 first look out now | Galatta

 

இந்த மாதம் 15 ஆம் தேதி டிமான்டி காலனி 2 படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அருள்நிதி கூறியதாவது, டிமான்டி காலனி படத்தின் முதல் பாகத்தின் கதையை தொடர்ந்து இரண்டாவது பாகமும் எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் சூப்பர் ஹிட் ஆனது. அதிலிருந்தே இரண்டாவது பாகம் எப்போது எடுக்கலாம் என அஜயிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் எதுக்குமே பயப்பட மாட்டேன்.

அருள்நிதி நடிப்பில் 'டிமான்டி காலனி 2' அறிவிப்பு வீடியோ வெளியீடு |  Arulnidhi's 'Demanti Colony 2' announcement video released

தப்பு பண்ணா தான் பயப்படுவேன். இதுவரைக்கும் என்னோட படம் ரிலீஸ் ஆகும் போது தான் ரொம்ப பயமா இருக்கும். முதல் படத்திலிருந்து இப்போ வரைக்கும் அப்படித்தான். படம் ரிலீஸ் ஆகும் போது பயமாயிருக்கும். நான் நடிச்ச கழுவேத்தி மூர்க்கன் படம் 2023 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அந்த படம் நல்ல ஓடும்னு நினைச்சேன். ஆனா எதிர்பார்த்த அளவு அந்த படம் ஓடல என பேசியுள்ளார்.

கழுவேத்தி மூர்க்கன் திரைவிமர்சனம் : கழுவேத்தி மூர்க்கன் சாதி அரசியலை பழி  வாங்கும் மிரட்டலும், ஆக்ரோஷமும், ஆக்ஷனும் கலந்த ...