பிரபல நடிகரான விஜயகுமாரின் மகள் தான் வனிதா விஜயகுமார். இவருக்கு ஸ்ரீஹரி என்ற மகனும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இதில் ஸ்ரீஹரி வனிதாவுக்கும் முதல் கணவர் ஆகாஷத்தில் பிறந்தவர். விவாகரத்து ஆனதற்கு பிறகு ஸ்ரீஹரி தனது தந்தையுடனே வளர்ந்து வந்துள்ளார். ஸ்ரீஹரிக்கும் வனிதாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை என்று கூறப்படுகிறது. இப்போது வனிதா வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு வனிதா விஜயகுமார் பேசியதாவது என் மகன் இப்போது ஹீரோவாக நடிக்கிறார். நானும் ஹீரோயினாக தான் நடித்துக் கொண்டிருக்கிறேன். சில நெருங்கிய நண்பர்கள் என்னை தொடர்பு கொண்டு உங்கள் மகன் ஹீரோவாக நடிக்கிறார். நீங்கள் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த பாக்கியம் எல்லாம் உங்க அம்மாவுக்கு கூட கிடைக்கவில்லை என கூறுகின்றனர்.

ஸ்ரீ ஹரி உங்கள் மகனா என சிலர் ஷாக்காக கேட்கின்றனர். அதே நேரம் என் மனதில் ஒரு பெரிய குறை இருந்தது. எனக்கு 18 வயது இருக்கும் போது திருமணம் ஆகிவிட்டது. என் மகனும் பிறந்து விட்டான். மெச்சூரிட்டி இல்லாத போது நான் எடுத்த முடிவு அது. அப்போது வருத்தப்பட்டு இருக்கிறேன். இப்போது என் மகன் பற்றி பெருமையாக சொல்கிறேன். எனது மகன் இவ்வளவு பெரிய ஹீரோவாக மாறிவிடுவார் என நான் நினைக்கவே இல்லை. என் மகன் அப்போது பிறந்ததால் தான் இப்போது ஹீரோவாக மாறி இருக்கிறார்.

நான் தாய்லாந்தில் இருக்கும் போது தான் எனது மகனின் திரைப்படத்திற்கான ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்தது. அவர் சிங்கத்துடன் நடிக்கிறார் என்ற செய்தி கேட்டு பயந்து போனேன். எனது மகனின் கண்கள் என் கண்களைப் போலவே இருக்கும். அவன் பார்ப்பதற்கு அருண் விஜய் அண்ணாவை போலவும் என்னை போலவும் இருப்பார். எனக்கு சந்தோஷம்தான். நானும் என் மகனும் பக்கத்தில் இல்லை. தூரமாகத்தான் இருக்கிறோம். இந்த மாதிரி நிலைமை எந்த தாய்க்கும் வரக்கூடாது என எமோஷனலாக பேசியுள்ளார் வனிதா விஜயகுமார்.

