தமிழ் சினிமாவின் 90ஸ் ஹீரோக்களில் ஒருவர்தான் நடிகர் பிரசாந்த்.இவர் தற்போது அவரின் தந்தை தியாகராஜன் இயக்கத்தில் வெளியாக உள்ள அந்தகன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த் ,சமுத்திரக்கனி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பிரசாந்துக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்திருக்கிறார். இந்நிலை படத்தின் பிரமோஷனுக்காக பிரபல ஊடகம் ஒன்றில் இயக்குனர் தியாகராஜன் ,நடிகர் பிரசாந்த் ,நடிகை பிரியா ஆனந்த் மற்றும் சிம்ரன் போன்றோர்கள் கலந்து கொண்டனர். அப்பொழுது சிம்ரன் பிரசாந்த் இணைந்து நடித்து பல வெற்றி படங்களையும் மக்களுக்கு பிடித்த அருமையான பாடல்களையும் தந்துள்ளீர்கள்.

மேலும் அப்பொழுது நடித்த பிரசாந்திற்க்கும் இப்பொழுது அந்தகன் படத்தில் நடித்துள்ள பிரசாந்திற்கும் என்ன வித்தியாசம் என்று கேள்வி எழுப்பினர்?. அதற்கு சிம்ரன் சிரித்துக்கொண்டே எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை அப்பொழுது நடித்த சுறுசுறுப்பும் நடிக்கும் திறமையும் சிறிதும் குறையவில்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடித்திருப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டனர் அதற்கு சிம்ரன் இயக்குனர் தியாகராஜன் எனக்கு அளிக்கப்பட்ட கதாபாத்திரம் ஹீரோயினையும் தாண்டி சிறந்ததாக இருக்கிறது என்றும் பதிலளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பிரசாந்திடம் ஏன் அனைத்து நிகழ்ச்சிக்கும் கண்ணாடி அணிந்து வருகிறீர்கள் என்று கேள்வி கேட்டனர் அதற்கு பிரசாந்த் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் அடையாளம் தான் இது ஆகவே பிரமோஷநிற்கு வரும்போது கண்டிப்பாக கண்ணாடி அணிவது அவசியம் என்றும் சஸ்பென்ஸ் ஆக கூறியுள்ளார்.
