விஜயின் புலி படம்.. பெயிலியர் ஆனதற்கு இதுதான் காரணம்.. படத்தின் இயக்குனர் ஓபன் டாக்..!

By Mahalakshmi on ஆடி 22, 2024

Spread the love

நடிகர் விஜயின் புலி படம் தோல்வி அடைந்ததற்கு இதுதான் காரணம் என சிம்புதேவன் ஒரு பேட்டியில் கூறியிருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் சேரன் இடமும், இயக்குனர் சங்கரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி பிரபலமானவர் சிம்பு தேவன். முதன்முதலாக வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி என்ற திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் சங்கர் தயாரிப்பிலேயே தன்னுடைய முதல் படத்தை இயக்கினார்.

   

   

அதனை தொடர்ந்து அறை எண் 305ல் கடவுள் என்ற திரைப்படத்தையும் சங்கர் தயாரிப்பிலேயே இயக்கியிருந்தார் சிம்பு தேவன். இந்த இரண்டு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இம்சை அரசன் போன்ற கதைக்களத்தில் படம் இயக்க நடிகர் விஜய் கூறிய நிலையில் அவருக்காக உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் புலி.

 

இந்த படத்தில் விஜயுடன் சேர்ந்து நடிகை ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படம் விஜயின் கெரியரில் மிக வித்தியாசமான திரைப்படமாக அமைந்திருந்தாலும் இப்படம் ரசிகர்களை அந்த அளவுக்கு கவரவில்லை என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் இப்படத்தின் தோல்விக்கான காரணத்தை இயக்குனர் சிம்பு தேவன் கூறியிருக்கின்றார்.

சிம்புதேவன் தற்போது யோகி பாபு, கௌரி கிருஷ்ணன் உள்ளிட்டவர்களை வைத்து போட் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வரும் இவர் பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார். அதில் ஒரு பேட்டியில் இந்த திரைப்படம் தோல்வியடைவதற்கான காரணத்தை பற்றி பேசி இருந்தார். புலி படத்தில் தேவையான அனைத்து விஷயங்களையும் சரியாகவே செய்தோம்.

ஆனால் அந்த சமயத்தில் ரைடு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு இடையில் இந்த திரைப்படம் வெளியானதால் கடும் விமர்சனங்களை சந்திக்க வேண்டி இருந்தது . குழந்தைகளுக்கான படமாக இம்சை அரசன் திரைப்படம் இருந்த நிலையில் அதே போல் தான் புலி திரைப்படமும் குழந்தைகளுக்கான படமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை கவருவதற்கு தவறிவிட்டது என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் இந்த திரைப்படத்தை பார்த்த பல பிரபலங்கள் தனக்கு போன் செய்து இப்படம் குறித்து சிறப்பாக பேசினார்கள் என்று தெரிவித்திருந்தார்.