விஜயகாந்த் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை நூறு ரூபாய் கட்டுகளாகதான் வேண்டும் என அடம்பிடித்த லிவிங்ஸடன் – எதற்காக தெரியுமா?

By vinoth on ஆடி 22, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் லிவிங்ஸ்டன். பாக்யராஜின் சிஷ்யகோடிகளில் ஒருவரான இவர் அவரிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.  1982 ஆம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற திரைப்படத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆக நடித்தார்.

இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். பிரபல இயக்குனரும் நடிகருமான ஜி எம் குமார் ஆகியோரோடு இணைந்து இவர் கதை எழுதிய திரைப்படம்தான்  சூப்பர் ஹிட் படமான காக்கிச்சட்டை. அதன் பிறகு1988 ஆம் ஆண்டு வெளியான பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

   

அதனைத் தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் மற்றும் உழைப்பாளி போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் சினிமாவில் பெரும்பாலான திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் குணச்சித்திர வேடத்திலும் தான் அதிகமாக நடித்துள்ளார். இவருக்கு என்றும் மக்கள் மத்தியில் தனி ஒரு இடம் உள்ளது. தொடர்ந்து விஜயகாந்த் இவருக்கு வாய்ப்புகளை தன் படத்தில் கொடுத்து வந்துள்ளார்.

   

அப்போது இவருக்கு நல்ல பிரபலம் கிடைத்ததும் ஒரு படத்துக்கு 7 லட்ச ரூபாஉ சம்பளம் கேட்டுள்ளார். அதை ஒத்துக்கொண்ட விஜயகாந்த் 5 லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். அந்த அட்வான்ஸ் தொகை முழுவதும் 100 ரூபாய் கட்டாகதான் வேண்டும் என லிவிங்ஸ்டன் பிடிவாதமாகக் கேட்டுள்ளார். அவர்களும் வங்கிக்கு சென்று அதை மாற்றி அரை மூட்டை நிறைய பணமாகக் கொடுத்துள்ளார்.

 

அந்த பணத்தோடு வீட்டுக்கு சென்ற லிவிங்ஸ்டன் அவருடைய அம்மாவை உட்கார சொல்லி அவர் மேல் அந்த பணத்தை எல்லாம் பணமழை பெய்வது போல போட்டாராம். இதைப் பார்த்து அதிர்ச்சியான அம்மாவிடம் ‘நான் ஒருநாள் லட்ச லட்சமாக சம்பாதிப்பேன் என சொன்னேன். அப்ப நம்பலைல நீ… இப்ப பாரு பணத்த. இது வெறும் அட்வான்ஸ்தான்” என அவரிடம் சொல்லி மகிழ்ந்தாராம்.