சங்கருக்கு ராம்சரண் கொடுத்த நெருக்கடி.. விடாமல் துரத்தும் இந்தியன் 2 பிரச்சனை.. இப்படி மாட்டிக்கிட்டாரே பாவம்..

By Mahalakshmi on ஆடி 18, 2024

Spread the love

இந்தியன் 2 திரைப்படத்தால் சங்கருக்கு பல சிக்கல்கள் வந்துள்ள நிலையில் புதிதாக ஒரு சிக்கலும் வந்திருக்கின்றது.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் சங்கர். எந்த திரைப்படத்திலும் காணாத அளவிற்கு சறுக்களை இந்தியன் 2 திரைப்படத்திற்கு பெற்றிருக்கின்றார். ஏற்கனவே படம் ஆரம்பித்தது தொடங்கி பல பிரச்சனைகளை சந்தித்த சங்கருக்கு மேலும் பிரச்சினைகள் வந்து கொண்டு தான் இருக்கின்றது .

   

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் இந்தியன் 2. கடந்த மூன்று வருடங்களுக்கு பிறகு எடுக்க தொடங்கிய இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தது. பின்னர் படத்தின் படப்பிடிப்பு டிராப் ஆகி மீண்டும் தொடங்கி என பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இப்படம் ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

   

 

இப்படம் வெளியானது முதலே ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. வசூல் ரீதியாக இப்படத்தை வெற்றி படம் என்றுதான் கூறுகிறார்கள். ஆனால் விமர்சன ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்கின்றது. இயக்குனர் சங்கரின் கெரியரிலேயே இவ்வளவு மோசமான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் இதுதான்.

இது ஒரு பக்கம் இருக்க இயக்குனர் சங்கர் தற்போது தெலுங்கில் தி கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தில் ராம்சரண், கியாரா அத்வானி நடித்து வருகிறார்கள். தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் சிரஞ்சீவியின் மகனான ராம்சரனும் அங்கு முன்னணி ஹீரோவாகத்தான் இருந்து வருகின்றார். ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றிக்கு பிறகு மிகப் பிரபலமான நடிகராக வளம் வந்த இவர் ஷங்கர் இயக்கத்தில் தி கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்திற்கு சம்பளமாக படத்தின் வருமானத்திலிருந்து ஒரு பங்கை கேட்டிருந்ததாக கூறப்பட்டு வந்தது. தற்போது இந்தியன் டு திரைப்படத்தை பார்த்த ராம்சரண் விமர்சனம் படுமோசமாக இருந்த காரணத்தால் தனக்கு 90 கோடி சம்பளமாக கொடுத்து விடுங்கள் என்று கூறிவிட்டாராம் .ஏனென்றால் படம் தோல்வியடைந்து விட்டால் தனக்கு சம்பளம் குறைவாக வரும் என்பதால் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இது இயக்குனர் சங்கருக்கு மேலும் நெருக்கடியை கொடுத்து இருக்கின்றது.