மௌனராகம் சீரியலில் ரவீனாவுக்கு அம்மாவாக நடித்த சிப்பி ரெஞ்சித் புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகின்றது. இந்த சீரியலில் நடித்து வரும் பலரும் தற்போது சினிமாவில் நடிகைகளாக கலக்கி வருகிறார்கள். அந்த வரிசையில் இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல் என்றால் அது மௌனராகம் தான்.

இந்த சீரியல் இரண்டு பாகங்களாக ஒளிப்பரப்பானது. அப்பா, மகள்களுக்கு இடையேயான பாசத்தை வெளிக்கொண்டுவரும் சீரியலாக ஒளிபரப்பாகி வந்தது, முதலில் மௌன ராகம் சீரியலில் சிறுமியின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒளிபரப்பான நிலையில் இரண்டாவது சீசன் கடந்த 2021 ஆம் ஆண்டு புதிய நடிகர்களுடன் தொடங்கப்பட்டது.

இந்த பாகத்தில் புதுமுக நடிகர்களுடன் இணைந்து ரவீனா, ராகுல், ஷில்பா, சல்மானுள் உள்ளிட்ட பலரும் நடித்து வந்தார்கள். 2,517 எபிசோடுகள் ஒளிபரப்பாகி இந்த சீரியல் முடிவுக்கு வந்தது. மௌனராகம் 1 மற்றும் மௌன ராகம் 2 சீரியலில் சக்தி என்பவருக்கு அம்மாவாக நடித்தவர் தான் சிப்பி ரஞ்சித். இவர் இந்த தொடரின் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கின்றார்.

மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்த இவர் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தார் . அதைத்தொடர்ந்து தற்போது குணசத்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் சீரியல்களை தயாரிப்பது மற்றும் சீரியல்களில் நடித்தும் வருகின்றார். இவர் ஒரு கோடி மதிப்புள்ள லேண்ட் ரோவர் டிஃபென்சர் என்ற காரை வாங்கி இருக்கின்றார். தனது கணவன் மற்றும் மகளுடன் இந்த காரை வாங்கி இருக்கும் இவர் இது தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
