நடிகை வரலட்சுமி சரத்குமாரின் ரிசப்ஷனுக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வலம் வருபவர் சரத்குமார். இவரின் முதல் மனைவிக்கு பிறந்த மூத்த மகள் வரலட்சுமி சரத்குமார். இவரின் திருமண நிகழ்ச்சி தான் தற்போது தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கில் இருக்கின்றது. போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து ஏகப்பட்ட திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்திருக்கின்றார்.

கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இவர் இப்படித்தான் நடிப்பேன் என்றெல்லாம் இல்லாமல் கதாநாயகியாகவும், வில்லியாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசதி வருகின்றார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி நடித்து வரும் இவர் தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

கடைசியாக தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான மூன்று திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இந்நிலையில் இவர் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தார். தொழிலதிபரான நிக்கோலை சச்தேவ் என்பவர் உடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட வரலட்சுமி அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை இரண்டாம் தேதி தாய்லாந்தில் திருமணம் செய்து கொண்டார்.

இவர் தனது திருமண அழைப்பிதழை தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவில் இருக்கும் பிரபலங்களுக்கு கொடுத்து வந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. பின்னர் ஹல்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சியின் புகைப்படங்களும் வீடியோக்களும் ட்ரெண்டிங்கில் இருந்தது. தற்போது தாய்லாந்தில் திருமணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பி இருக்கும் வரலட்சுமியின் ரிசப்ஷன் புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை சேர்ந்த ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். நடிகர் சதீஷ், நடிகை ஷோபா, நடிகர் பிரபுதேவா, நடிகை ரம்யா கிருஷ்ணன், தெலுங்கு நடிகர் பாலையா மற்றும் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என பலரும் இந்த ரிசப்ஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் இதோ..

