தன் காதலியை அறிமுகப்படுத்திய விஜய் டிவி முத்தழகு சீரியல் பிரபலம்.. திருமணம் பற்றி கொடுத்த அப்டேட்..!

By Mahalakshmi on ஆடி 2, 2024

Spread the love

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் நாயகன் நடிகர் ஆஷிஷ் தனது காதலியை அறிமுகம் செய்திருக்கின்றார்.

விஜய் டிவியில் மேட்னி ஷோவாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் முத்தழகு. இந்த சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை ஒளிபரப்பாகி வருகின்றது. இரண்டு மனைவிகளை கட்டிக்கொண்டு கதாநாயகன் படம் பாட்டை தான் இந்த சீரியலில் எடுத்து கூறி இருக்கிறார்கள். இதில் பூமிநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஆஷிஷ்.

   

   

ஆரம்பத்தில் அஞ்சலியை காதலித்து வந்து இவர் தனது அம்மாவின் சொல்லுக்காக முத்தரகை திருமணம் செய்து கொள்கிறார். பிறகு அஞ்சலி நான் உன்னை தான் காதலிக்கிறேன் என்னை நீ திருமணம் செய்து விட்டாய் என்று கூறி பூமிநாதனை அஞ்சனியை மிரட்டுகிறார். திருமணத்திற்கு பின்பு ஒரே வீட்டில் முத்தழகும் அஞ்சலியும் இருக்க மாறி மாறி பூமிநாதன் எனக்குத்தான் என்று சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.

 

ஒரு கட்டத்தில் அஞ்சலி கர்ப்பமாக இல்லாமலேயே கர்ப்பம் என்று கூற முத்தலகின் குழந்தையை தன் குழந்தை என தூக்கி வைத்துக்கொண்டு நாடகம் ஆடி வருகின்றார். இதற்கு இடையில் மற்றொரு ட்விஸ்ட் ஆக முத்தழகுக்கு ஆக்சிடென்ட் ஆகி கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த எந்த விஷயமும் அவருக்கு ஞாபகம் இல்லை . இப்போது பூமிநாதன் மீண்டும் முத்தழகை காதலித்து வருகின்றார்.

இப்படி சீரியல் தடம் மாறி எங்கேயோ சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் பூமிநாதன் கேரக்டரில் நடித்து வரும் ஆஷிஷ் அவர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். சாமிங்காக சாக்லேட் பாய் போல் இருப்பதால் பலரும் அவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலோ செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் அவர்களுக்கெல்லாம் ஷாக் கொடுக்கும் விதமாக பூமிநாதன் நேற்று ரீல்ஸ் வீடியோ ஒன்றை ஷேர் செய்திருந்த இவர் இதயம் என்ற எமோஜியை வைத்திருந்தார். இதைப் பார்த்த பலரும் நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா? என்று கேட்க ஆம் என்று பதிலளித்திருந்தார். அதோடு தன்னுடைய வருங்கால மனைவி டாக்டர் காயத்ரி சிவா என்று குறிப்பிட்டு இருக்கின்றார். அதோடு அடுத்த வருடம் தாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறியிருக்கிறார். இதை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.