சேலையில் செம க்யூட்டாக இருக்கும் நடிகை பவித்ரா லட்சுமி.. புகைப்படம் பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

By Mahalakshmi on ஆனி 25, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான பவித்ரா லட்சுமி வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

சினிமாவில் மாடல் அழகியாக அறிமுகமானவர் பவித்ரா லட்சுமி.  மலையாள மற்றும் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

   

 

டிவி ஷோக்கள் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த இவர் பல குறும்படங்களில் நடித்திருக்கின்றார். இதன் மூலமாக இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அதன்படி குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், கதாநாயகிகளுக்கு தங்கை உள்ளிட்ட கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். அதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தியிருந்தார்.

அதில் இவரும் புகழும் செய்யும் லூட்டி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. பின்னர் நாய் சேகர் என்கின்ற திரைப்படத்தில் நடிகர் சதீஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புக்காக காத்திருக்கும் பவித்ரா லட்சுமி சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.

அந்த வகையில் தற்போது சேலையில் மிக அழகாக போட்டோஸ் எடுத்து அதனை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரை வர்ணித்து வருகிறார்கள்.