விமர்சையாக நடந்த பிரபல நடிகர் சார்லியின் மகன் திருமணம்.. மணமக்களை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்.. வைரலாகும் போட்டோஸ்…!!

By admin on ஆனி 11, 2024

Spread the love

80,90-களில் பிரபல காமெடியனாக வலம் வந்தவர் சார்லி. இவர் தனது நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார்.கடந்த 1983 -ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரிலீசான பொய்க்கால் குதிரை திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். நடிப்பின் மீது சார்லிக்கு அதீத ஆர்வம் இருந்தது.

அடடே இது தெரியாம போச்சே.. நடிகர் சார்லியின் அசர வைக்கும் உண்மை முகம்! |  actor charlie Birthday special : Unknown Facts of Comedy actor charlie -  Tamil Filmibeat

   

இதனால் அரசு வேலையை கூட வேண்டாம் என கூறிவிட்டு நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு இருந்தார். இவர் காமெடி நடிகராகவும், குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதுவரை சுமார் 800-க்கும் மேற்பட்ட படங்களில் சார்லி நடித்துள்ளார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களான விஜய், ரஜினி, அஜித், கமல், பிரசாந்த், கார்த்திக், முரளி, பிரபு உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார்.

   

 

காதலுக்கு மரியாதை, பிரெண்ட்ஸ், வெற்றி கொடி கட்டு, அமர்க்களம் ஆகிய படத்தில் சார்லியின் நடிப்பு அசத்தலாக இருந்தது. சமீபத்தில் இறைவன், ஜோ ஆகிய படங்களிலும் சார்லி நடித்துள்ளார். இவருக்கு தமிழ்நாடு அரசின் விருது, கலைமாமணி விருது, கலை சிகரம் விருது உள்ளிட்ட பல விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சார்லியின் மகன் அஜய் தங்கசாமியின் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியிலும் இன்று நடைபெற்ற திருமணத்திலும் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். முக்கியமாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மணமக்களை வாழ்த்தி உள்ளார். அதன் பிறகு இளையராஜா உள்ளிட்ட முக்கிய பிரபலங்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.