நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் ராஜாதி ராஜா. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இப்படம் வெளியாகி 35 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. 1988 ரஜினி குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன் என இரண்டு ஹிட்டு படங்களை கொடுத்தார். அதன் பிறகு ஒரு ஆங்கிலப் படத்தில் நடித்திருந்தார், ஆனால் அந்த திரைப்படம் சுமாராகவே அமைந்தது.

பின்னர் பாரதிராஜா இயக்கத்தில் கொடி கட்டி பறக்குது படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்தார். 16 வயதினிலே படித்தற்கு பிறகு பாரதிராஜாவும், ரஜினிகாந்தும் இணையும் திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. ஆனால் ரசிகர்களை அந்த படம் ஏமாற்றியது. பின்னர் அம்மன் கோயில் கிழக்காலே என்ற படத்தை ஆர் சுந்தர்ராஜன் ரஜினி வைத்து தான் எடுக்க முடிவு செய்தார்,
ஆனால் அப்போது ரஜினியை வைத்து இயக்க முடியவில்லை. பின்னர் அப்படத்தில் விஜயகாந்த் வைத்து எடுத்தார். அதை தொடர்ந்து மூன்றே வருடங்களில் அவர் விரும்பியபடி ராஜாதி ராஜா திரைப்படத்தை ரஜினியை வைத்து இயக்கினார். இந்த படத்தில் கமிட்டாகி இருந்தபோது நடிகர் ரஜினிகாந்துக்கு சுந்தர்ராஜன் படத்தின் முழு கதையையும் கூறவில்லை. சுந்தரராஜன் மீது இருந்த நம்பிக்கை காரணமாக இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்.

அவர்களின் சூட்டிங் ஸ்டைலை பார்த்த ரஜினிக்கு மிகப்பெரிய அதிருப்தி இருந்தது. இந்த படம் நிச்சயம் ஓடாது என்று எண்ணினார். கமிட்டாகி விட்டோம் நடித்துக் கொடுப்போம் என்று எண்ணத்திலேயே இந்த படத்தில் நடித்திருந்தார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டு ரிலீஸ் ஆனது. ரஜினி எதிர்பார்க்காத வகையில் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
முதல் நாளிலேயே 90 லட்சத்திற்கும் அதிகமாக வசூல் செய்தது. இது ஷோலோ படத்தை விட முதல் நாள் வசூல் அதிகம் என்பதால் மறுநாள் கூட்டம் கூட்டமாக குடும்பமாக இப்படத்தை பார்க்க படை எடுத்தனர், சென்னை, மதுரை ஆகிய மாவட்டங்களில் இந்த திரைப்படமானது 100 நாள் ஓடியது, தென்காசியில் முதல் முதலாக 100 நாள் ஓடிய திரைப்படம் இதுதான், ரஜினியின் கணிப்பை தவிடு பொடியாக்கி சக்க போடு போட்டது ராஜாதி ராஜா திரைப்படம்.

இதை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் அவர்களே ஷாக் ஆகிவிட்டாராம். ஆர் சுந்தர்ராஜன் தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவர் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார். வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, பயணங்கள் முடிவதில்லை, சுகமான ராகங்கள், குங்குமச்சிமிழ் உள்ளிட பல ஹிட் திரைப்படங்களை கொடுத்திருந்தார். அதிலும் வைதேகி காத்திருந்தால் திரைப்படம் விஜயகாந்த் அவர்களுக்கு மிகப்பெரிய திருப்புமுறையை ஏற்படுத்திய திரைப்படம் என்று கூறலாம்.
