நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்கும். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இதனை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது. நிதி பற்றாக்குறை காரணமாக ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தை எடுத்து முடித்துவிட்டு அதில் வரும் லாபத்தை வைத்து விடாமுயற்சி பலத்தை இயக்கலாம் என தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டது.

இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் தனது அடுத்த படத்தில் நடிக்க கமிட்டானார். அந்த படத்திற்கு குட் பேட் அக்லி என பெயரிடப்பட்டது. இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்திற்கு அஜித் 163 கோடி ரூபாய் சம்பளம் வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம். இதுகுறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல படத்தின் இயக்குனர் ஆதித் ரவிச்சந்திரனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

