பிரபல நடிகையான ஸ்ரீபிரியா 1970 மற்றும் 80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் 350 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் ஸ்ரீபிரியா நடித்துள்ளார்.

கடந்த 1974-ஆம் ஆண்டு ரிலீசான முருகன் காட்டிய வழி என்ற திரைப்படத்தின் மூலம் ஸ்ரீபிரியா அறிமுகமானார். அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்தார். கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் உடன் ஸ்ரீபிரியா ஏராளமான படங்களில் இணைந்து நடித்தார். அதில் ரஜினிகாந்த்வுடன் ஸ்ரீப்ரியா இணைந்து நடித்த படங்கள் ஏராளம். அது என்னென்ன தெரியுமா?

முதலாவதாக 1977-ஆம் ஆண்டு ஸ்ரீபிரியா ரஜினிகாந்த்துடன் இணைந்து ஆடு புலி ஆட்டம் படத்தில் நடித்தார். அடுத்ததாக 1978-ஆம் ஆண்டு ரிலீசான இளமை ஊஞ்சல் ஆடுகிறது, 1978-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பைரவி, 1978-ஆம் ஆண்டு ரிலீசான என் கேள்விக்கு என்ன பதில், 1978-ஆம் ஆண்டு ரிலீசான தாய் மீது சத்தியம், 1978-ஆம் ஆண்டு ரிலீசான அவள் அப்படிதான், 1979-ஆம் ஆண்டு ரிலீசான அன்னை ஒரு ஆலயம், 1979-ஆம் ஆண்டு ரிலீசான அலாவுதீனும் அற்புத விளக்கும் ஆகிய படங்களில் நடித்தார்.

பின்னர் 1980-ஆம் ஆண்டு ரிலீசான பில்லா, 1980-ஆம் ஆண்டு ரிலீசான பொல்லாதவன், 1980-ஆம் ஆண்டு ரிலீசான நட்சத்திரம், 1980-ஆம் ஆண்டு ரிலீசான காளி, 1981-ஆம் ஆண்டு ரிலீசான தீ, 1982-ஆம் ஆண்டு ரிலீசான தனிக்காட்டு ராஜா, 1986-ஆம் ஆண்டு ரிலீசான கோடை மழை ஆகிய படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் ஸ்ரீபிரியாவும் இணைந்து நடித்துள்ளனர். இதில் நட்சத்திரம் மற்றும் கோடை மழை ஆகிய படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேஸ்ட்ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

