தமிழ் சினிமாவில் வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்தவர் நடிகர் பிரசாந்த். அதையடுத்து அவர் பாலு மகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் என அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து 90 களில் சாக்லேட் பாய் கதாநாயகனாக வலம் வந்தார்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். ஆனால் 2000 களுக்குப் பிறகு அவரின் மார்க்கெட் டல்லானது. இடையில் அவரின் திருமண வாழ்க்கையும் சிக்கலில் முடிந்ததால் அவரால் சினிமாவில் தொடர்ச்சியாக கவனம் செலுத்த முடியவில்லை.

sivaji ganesan with prasanth
அதனால் அவர் சினிமாவில் நீண்ட இடைவெளியை எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் அவர் தெலுங்கு படமொன்றில் குணச்சித்திர வேடத்தில் நடித்தது ரசிகர்களுக்கு இடையே சோ கத் தை ஏற்படுத்தியது. அதையடுத்து இப்போது விஜய்யின் கோட் திரைப்படத்திலும் செகண்ட் ஹீரோவாக நடித்து வருகிறார்.
பிரசாந்தின் சினிமா வாழ்க்கையில் அவருக்கு ஒரு ஆலோசகர் போல செயல்பட்டவர் அவரின் தந்தை தியாகராஜன். சினிமாவில் வளர்ச்சியடைந்து வந்த காலத்தில் அவரை நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் அழைத்துச் சென்று வாழ்த்துகள் பெற வைத்தாராம்.
அப்போது சிவாஜி கணேசன் பிரசாந்துக்கு மூன்று அறிவுரைகளை வழங்கியுள்ளார். அந்த சந்திப்பில் “நான் பிரபுவுக்குக் கூட இந்த அறிவுரைகளை சொன்னது கிடையாது. சினிமாவில் வந்துவிட்டாய். அதனால் இந்த மூன்று விஷயங்களை எப்போதும் நினைவில் வைத்துக் கொள். முதலில் 6 மணிக்கு ஷுட்டிங் என்றால் 5.30 மணிக்கெல்லாம் மேக்கப் உடன் போய் தயாராக இரு. அடுத்ததாக இயக்குரிடம் எதுவும் கேட்காதே. அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே நடித்துக் கொடுத்துவிட்டு வந்துவிடு. ஏன் அது அப்படி? இது இப்படி என்றெல்லாம் கேட்காதே. மூன்றாவதாக எந்த நடிகைகளுடனும் நெருங்கிப் பழகாதே.” எனக் கூறினாராம்.
சிவாஜி சொன்ன இந்த மூன்று விஷயங்களையும் பிரசாந்த் இன்று வரை பாலோ பண்ணுகிறாராம்.
