மனைவி, மகன், மகள் என குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்திய ஷாருக்கான்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

By Mahalakshmi on வைகாசி 20, 2024

Spread the love

நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய பிரபலமாக வளர்ந்து வருபவர் ஷாருக்கான். பாலிவுட்டின் பாட்ஷா என்று அழைக்கப்பட்டு வரும் இவர் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.

   

பாலிவுட்டில் நடித்திருந்தாலும் தமிழில் இதற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. நாடு முழுவதும் ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் என்று தனக்கு நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வந்து வாக்களித்து சென்றார்.

   

 

மனைவி கௌரிக்கான் மற்றும் குழந்தைகளான சுகானா கான், ஆர்யன் கான் ஆகியோருடன் வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறார். அவர்கள் வாக்களிக்க வந்த போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஷாருக்கான்இரண்டாவது மகன் அப்ராம் வாக்களிப்பதற்கு வயதில்லாத காரணத்தினால் வாக்குச்சாவடிக்கு வெளியே நின்று இருந்தார்.

ஷாருக்கான் கருப்பு டி ஷர்ட் மற்றும் நீல நிற பேண்ட் அணிந்து வந்திருந்தார். புது ஹேர் ஸ்டைலில் மாசாக வந்திருந்தார். அவரது மனைவி கௌரிக்கான் வெள்ளை நிற டாப் மற்றும் ப்ளூ ஜீன்ஸ் அணிந்திருந்தார். மகன்களான ஆரயன் மற்றும் அப்ராம் வெள்ளை நிற  உடையை அணிந்திருந்தார்கள்.

ஷாருக்கானை பார்ப்பதற்கு அங்கு கூட்டம் கூடியதால் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு கொடுத்து அவர்களை வழியனுப்பி வைத்தனர். மும்பையில் உள்ள மற்ற வாக்குச்சாவடிகளில் பல பாலிவுட் பிரபலங்கள் வாக்களித்து சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.