அட நம்ம கோலி சோடா பட ATM-ஆ இது..? இப்படி அழகா மாறிட்டாங்களே.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..!

By Mahalakshmi on வைகாசி 17, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான கோலிசோடா திரைப்படத்தில் ஏடிஎம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை சீதாவின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான திரைப்படம் கோலிசோடா. பசங்க படத்தில் நடித்திருந்த பல நடிகர்கள் இப்படத்தில் நடித்திருப்பார்கள்.

   

நான்கு சிறுவர்கள், இரண்டு சிறுமிகளை சுற்றி நடக்கும் கதைதான் கோலிசோடா. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சீதா. ஏடிஎம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

   

 

புட்டி கண்ணாடி, ஒல்லியான தோற்றம் என ஏடிஎம் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிறுமி ஒரு செடி ஒன் ஃப்ளவர் என்ற காதலுக்கு சொல்லும் டயலாக் இன்றளவும் ஃபேமசாக இருந்து வருகின்றது. தற்போது படங்களில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடி வரும் இவர் இந்த திரைப்படத்தில் நடித்ததே ஒரு சுவாரசியமான கதை. பள்ளி முடித்து ரோட்டில் நடந்து கொண்டு சென்றிருந்தபோது இயக்குனரின் கண்ணில் பட்டு இருக்கின்றார்.

பின்னர் ஒரு வழியாக அவரது வீட்டை தேடி கண்டுபிடித்து இப்படத்தில் விஜய் மில்டன் நடிக்க வைத்திருக்கிறார். முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்று இவர் அடுத்தடுத்து 10 எண்றதுக்குள்ள மற்றும் சார்லி சாப்ளின் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காததால் தொடர்ந்து நல்ல கதை பாத்திரத்திற்கு காத்திருக்கின்றார். இந்நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் புட்டி கண்ணாடி போட்ட ATM-ஆ இது என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள். சீதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.