வசூலில் உச்சத்தை தொட்ட ஆடு ஜீவிதம் படம்.. 25 நாட்களில் எத்தனை கோடி கலெக்சன் தெரியுமா?..

By Mahalakshmi on சித்திரை 21, 2024

Spread the love

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பழமொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியான திரைப்படம் ஆடு ஜீவிதம், இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இப்படத்திற்கு தன்னுடைய நடிப்பால் உயிர் கொடுத்து இருக்கின்றார் பிரித்திவிராஜ்.

   

பிரித்திவிராஜ்க்கு ஜோடியாக அமலா பால் இப்படத்தில் நடித்திருக்கின்றார். உண்மை கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. 16 ஆண்டுகளாக இந்த படத்திற்காக நடிகர் பிரிதிவிராஜ் மற்றும் படத்தின் இயக்குனர் பிளஸ்சி பல முயற்சிகளையும் மேற்கொண்டு வந்த நிலையில் அந்த உழைப்பிற்கான பலனை தற்போது அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

   

 

இந்த திரைப்படம் கடந்த மார்ச் 28ஆம் தேதி வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. படம் வெளியாகி ஒரு சில வாரங்களிலேயே 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த நிலையில் இன்றுடன் இப்படம் வெளியாகி 25 நாட்கள் ஆகின்றது. உலக அளவில் 150 கோடிக்கு மேல் இப்படம் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.