9 வருடங்களுக்கு பிறகு ரீ யூனியன் ஆன ‘நாதஸ்வரம்’ சீரியல் அக்கா- தங்கைகள்… இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..?

By Begam on சித்திரை 14, 2024

Spread the love

சீரியல் என்றாலே மக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சீரியல்கள் பெரும்பாலும் இல்லத்தரசிகளை கவரும் வகையிலேயே எடுக்கப்பட்டும் வருகிறது. இதில் முன்னிலையில்  இருப்பவை சன் டிவி மற்றும் விஜய் டிவி தொலைக்காட்சி சேனல்கள். இவற்றில் ஒளிபரப்பாகும் மெகா தொடர்களுக்கு என ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

   

அந்த வகையில் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மக்கள் மனம் கவர்ந்த மெகா தொடர் ‘நாதஸ்வரம்’. இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் 2010 முதல் 2015 வரை  ஒளிபரப்பான இந்த சீரியல் இல்லத்தரசிகள் மனதில் ஒரு நீங்காத இடத்தை பிடித்தது. கொரோனா லாக் டவுன் சமயத்தில் மறுஒளிபரப்பு செய்யப்பட்ட பொழுது கூட நல்ல வரவேற்பு பெற்றது.

   

 

தங்கைகள் மீது பாசம் கொண்ட அண்ணன், அவர்களுக்காக என்னவெல்லாம் செய்கிறார் என்பதையும், எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார் என்பதையும் உணர்வு பூர்வமாக காட்டியது இந்த சீரியல்.  இந்த சீரியலை இயக்கி, கோபி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் திருமுருகன்.

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் சந்திரமௌலி, பூவிலங்கு மோகன், ஸ்ரித்திகா, ஜெயந்தி நாராயணன், தேனீ சத்தியபாமா, ரேவதி தமோதிரன், ஜெயஸ்ரீ, ஸ்ருதி ஷண்முக பிரியா, சங்கவி, சிந்து, சுதா பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இவர்களில் பலர் சீரியல் முடிந்த பின்னர் காணாமல் போய் விட்டனர்.

இந்நிலையில் சுமார் 9 வருடங்கள் கழித்து, நாதஸ்வரம் சீரியலில் அக்கா – தங்கைகளாக நடித்த நடிகைகள் மீண்டும் ரீயூனியன் நடத்தி, ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டுள்ளனர். அந்த மகிழ்ச்சியான தருணங்களை இணையத்தில் புகைப்படங்களாக பகிர, இதைப்பார்த்த  ரசிகர்கள்  ‘திரும்பவும் நீங்கள் அனைவரும் இணைந்து ஒரு சீரியல் நடிக்க வேண்டும்’ என தங்களது கோரிக்கையை வைத்து லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.