தலைவர் 171 இந்த ஹாலிவுட் படத்தோட காப்பியா? என்னப்பா சொல்றீங்க!!

By Arun on சித்திரை 14, 2024

Spread the love

“லியோ” திரைப்படத்தை தொடர்ந்து “தலைவர் 171” திரைப்படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் ரஜினிகாந்த் தனது கையில் பல கைக்கடிகாரங்களை கை விலங்கு போல் மாட்டியிருக்கிறார்.

   

வழக்கம்போல் இணையவாசிகள் இந்த போஸ்டரை டிகோட் செய்து வருகின்றனர். இது டைம் டிராவல் கதை என்று பலரும் தங்களது கருத்தை கூறி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன், “தலைவர் 171” திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

   

அதாவது “தலைவர் 171” திரைப்படம் “The Purge” என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல் என்று கூறியுள்ளார். “The Purge” திரைப்படம் 2013 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளிவந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் கதை ஒரே நாளில் நடப்பது போல் படமாக்கியிருப்பார்கள். ஆதலால்தான் நேரத்தை குறிப்பது போல் ரஜினியின் கையில் கைக்கடிகாரம் கைவிலங்கு போல் கட்டப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.

 

“தலைவர் 171” திரைப்படத்தின் டைட்டில் டீசர் வருகிற ஏப்ரல் 22 ஆம் தேதி வெளிவரவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருக்கும். குறிப்பாக “தலைவர் 171” திரைப்படம் LCUவுக்குள் வருமா என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. ஆனால் இத்திரைப்படம் LCUவுக்குள் வராது என்று கூறப்படுகிறது.