தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் இந்த ஆண்டு மக்களிடையே சரியான வரவேற்பை பெறவில்லை. ஆனால் மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு, ஆடுஜீவிதம், பிரம்மயுகம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவிலும் மல்லிக் ராம் இயக்கத்தில் சித்து ஜன்னலகட்டா, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்த டில்லு ஸ்கொயர் படம் கடந்த மார்ச் மாதம் 29-ஆம் தேதி ரிலீசானது.

இந்த படம் தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் 49 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ரிலீஸ் ஆன முதல் நாளில் 11.2 கோடி, இரண்டாம் நாளில் 10.25 கோடி ரூபாய் 3-ஆம் நாளில் 11 கோடி ரூபாய், 4-ஆம் நாளில் 6.25 கோடி ரூபாய், 5-ஆம் நாளில் 4.4 கோடி ரூபாய், ஆறாம் நாளில் 3.15 கோடி ரூபாய், ஏழாம் நாளில் 2.65 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

