‘ஈரம்’ பட அறிவழகனின் அடுத்த தரமான சம்பவம்… தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுப்பாரா ஆதி..? வெளியான ‘சப்தம்’ படத்தின் மிரட்டல் டீசர்…

By Begam on சித்திரை 13, 2024

Spread the love

2009 ஆம் ஆண்டு இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான பயங்கர திகில் படம் ‘ஈரம்’. தனது  முதல் படத்திலேயே தனக்கென ஒரு தனி  முத்திரையை பதித்தார் இயக்குனர் அறிவழகன். ஈரம் திரைப்படத்தில் நடிகர் ஆதி, நடிகை சிந்து மேனன், நடிகர் நந்தா, நடிகை சரண்யா மோகன் மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

   

காதல் கலந்த திரில்லர் படமாக அமைந்த ஈரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இயக்குனர் அறிவழகன் ஈரம் படத்தை தொடர்ந்து வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 போன்ற படங்களையும் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

   

 

தற்பொழுது இந்த கூட்டணி மீண்டும் இணைந்து, ‘சப்தம்’ எனும் மற்றொரு திரில்லர்  படத்துடன் ரசிகர்களை மிரட்ட வந்துள்ளனர். இந்த படத்தில் மீண்டும் ஆதி ஹீரோவாக நடிக்க, நடிகைகள் சிம்ரன், லைலா மற்றும் லட்சுமி மேனன் என 3 நடிகைகள் நடிப்பில் மிரட்டியுள்ளனர்.

முதல் படத்தில் தண்ணீரை வைத்து மிரட்டிய அறிவழகன், இந்த படத்தில் சப்தத்தை வைத்து பயமுறுத்த உள்ளார்.  டீசரின் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பலமடங்கு கூட்டியுள்ளது. இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அறிவழகன் அடுத்த தரமான சம்பவம் செய்ய ரெடியாகியுள்ளார். மேலும் இப்படம் மூலம் நடிகர் ஆதி தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுப்பாரா..? பொறுத்திருந்து பார்க்கலாம். இதோ ‘சப்தம்’ படத்தின் மிரட்டல் டீசர்…