தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகனான விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். அதன் பிறகு அவர் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்தது. விஜய் தேவரகொண்டா சமந்தா நடித்த குஷி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா ஃபேமிலி ஸ்டார் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் மிருநாள் தாக்கூர் கதாநாயகியாக நடித்தார்ம் ஃபேமிலி ஸ்டார் படத்தை தில் ராஜு தயாரித்தார். கடந்த ஏப்ரல் ஐந்தாம் தேதி படம் ரிலீஸ் ஆனது. ஆனால் படம் சரியாக மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. படம் கிரிஞ்சாக இருப்பதாக ரசிகர்களும் விமர்சகர்களும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஃபேமிலி ஸ்டார் படத்தை எடுக்க 94 கோடி ரூபாய் பட்ஜெட் ஆன நிலையில் இதுவரை 30 கோடி ரூபாய் கூட வசூல் செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் தயாரிப்பாளர் தில்ராஜ் படம் சரியாக ஓடாததற்கு எதிர்மறை விமர்சனங்களை கொடுக்கும் விமர்சகர்கள் தான் காரணம் என குற்றம் சாட்டுகிறார்.

மேலும் படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா எதிர்மறை விமர்சனம் கொடுத்தவர்களின் பெயர்களை எடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறுகிறார். ஃபேமிலி ஸ்டார் படம் விஜய் தேவரகொண்டாவுக்கு நல்ல திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் படம் மக்களிடைய வரவேற்பு பெறாததால் என்ன செய்வது என்று அறியாமல் தயாரிப்பாளரும், கதாநாயகனும் புலம்பி கொண்டிருக்கின்றனர்.

