நடிகை திவ்யா துரைசாமி செய்தி வாசிப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கினார்m அதன் பிறகு விஜேவாக முன்னேறி தமிழ் சினிமாவில் இளம் ஹீரோயினாக தற்போது வலம் வருகிறார்.

முதலில் வெள்ளி திரையில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் திவ்யா துரைசாமி நடித்தார். அதன் பிறகு அவருக்கு பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.

சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதே போல பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் வாழை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இது போக சில வெப் சீரிஸிலும் திவ்யா துரைசாமி நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா துரைசாமி அவ்வபோது கிளாமராக போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது கருப்பு நிற மார்டன் உடையில் திவ்யா துரைசாமி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவ்வளவு அழகா இருக்கீங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

