ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் தமிழக வீரர் நடராஜன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடராஜன் தனது 33-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தற்போது தொடங்கியுள்ளது. மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கதாக ஆகும்.

இந்நிலையில் நள்ளிரவு ஹைதராபாத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் நடிகர் அஜித்குமார் பங்கேற்று நடராஜனை வாழ்த்தி உள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. அந்த வீடியோவில் நடராஜன் கேக் வெட்டியதும் அஜித்துக்கு ஊட்ட செல்கிறார்.

அப்போது அஜித் முதலில் முத்தையா முரளிதரனுக்கு கொடுங்கள் என கூறுகிறார். அவருக்கு கொடுத்த பிறகு அஜித் கேக்கை நடராஜனுக்கு ஊட்டி விடுகிறார். நடராஜனும் அஜித்துக்கு கேக்கை ஊட்டி விடுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவித்து நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Video of Thala #Ajithkumar at Cricketer #Natarajan‘s Birthday celebration..❣️????pic.twitter.com/WSENORB4EB
— Laxmi Kanth (@iammoviebuff007) April 4, 2024
