என்னது.. ‘தங்கலான்’ படத்துல நடிகர் சூர்யா- வா..? வேற லெவல் பிளான் போட்ட ‘கங்குவா’… வெளியான மாஸ் அப்டேட்… 

By Begam on பங்குனி 5, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சூர்யா. தற்பொழுது இவரின்  மிரட்டலான நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் உருவாகி வருகிறது.  யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் சூர்யா 10-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார்.

   

இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஏராளமான அனிமேஷன் காட்சிகள் இடம்பெற உள்ளது. இப்படத்தின் தென்னிந்திய டிஜிட்டல் ரைட்ஸ் மட்டும் அமேசான் பிரைம் வீடியோவுக்கு 80 கோடிக்கும் விற்கப்பட்டது.

   

 

தற்பொழுது இத்திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது கங்குவார் டீசர் குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி டீசர் தயாராகி விட்டதாகவும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு டீசரை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

#image_title

அதோடு மட்டுமின்றி விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் தங்களான் படத்தின் இடைவேளையில் கங்குபடத்தின் டீசரை இணைத்திடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. 10 மொழிகளில் வெளியாக இருக்கும் கங்குவா மேக்ஸ் மற்றும் 3 டி ஃபார்மெட்டில் ரிலீஸ் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த பதிவு…