‘குணா’ டப்பிங்கில் நடந்த அடிதடி சண்டை… அதனால் ஜனகராஜை முழுவதுமாக நிராகரித்த கமல்ஹாசன்..

By vinoth on பங்குனி 5, 2024

Spread the love

கமல்ஹாசன் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியாகி இப்போது வரை ஒரு கல்ட் கிளாசிக் படமாகக் கொண்டாடப்பட்டு வரும் திரைப்படம் ‘குணா’. ஆனால் இந்த படம் வெளியான போது அப்போதைய ரசிகர்களால் பெரிதாக வரவேற்கப்படவில்லை. கமலின் பல தோல்வி படங்களைப் போல இந்த படமும் காலத்துக்கு முந்தைய படமாகவே அமைந்து விட்டது.

குணா படம் ஹிட்டாகவில்லை என்றாலும் அந்த படத்தின் பாடல்களும், படத்தில் முக்கியமானக் காட்சிகளை உருவாக்கிய குகைக் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. கொடைக்கானலில் மனித நடமாட்டம் இல்லாத அந்த குகை அதன் பின்னர் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து குணா குகை என்றே அழைக்கப்பட்டு வந்தது.

   

குணா படத்தின் உருவாக்கத்தின் போது ஜனகராஜால் ஏற்பட்ட பிரச்சனை ஒன்றால் அதன் பின்னர் அவரை கமல் தன்னுடைய படங்களில் முழுவதுமாக நிராகரித்துள்ளார். வழக்கமாக கமல்ஹாசனோடு இணைந்து நடிக்கும் போது ஜனகராஜுக்கு சிறப்பான கதாபாத்திரமாக அமைந்துவிடும். நாயகன், குணா எல்லாம் அதற்கான உதாரணங்கள்.

   

இந்த படத்தில் கமலின் சித்தப்பா வேடத்தில் நடித்திருந்த ஜனகராஜ் டப்பிங்கின் போது அந்த படத்தின் இணை இயக்குனர் ஆர் எஸ் சிவாஜி சொன்ன கரெக்‌ஷனை ஏற்க மறுத்துள்ளார். அப்போது இயக்குனர் சந்தானபாரதியும் ஜனகராஜை ஒரு வசனத்தை ஒன்மோர் பேச சொல்லியுள்ளார். ஆனால் அதைக் கேட்காமல் ஜனகராஜ் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஜனகராஜ் கெட்ட வார்த்தையை பேசிவிட அவரை ஆர் எஸ் சிவாஜியும், சந்தானபாரதியும் ஏவிஎம் ஸ்டுடியோவுக்குள் துரத்தி சென்று அடித்துள்ளனர்.

 

அது சம்மந்தமாக பிரச்சனை யூனியனுக்கு சென்றுள்ளது. அப்போது பேச்சுவார்த்தையில் சுமூகமாகி டப்பிங் பேசிக்கொடுத்துள்ளார் ஜனகராஜ். இந்த பிரச்சனைகளால் படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன் மிகவும் அதிருப்தியடைந்துள்ளார். அதனால் அதன் பிறகு தன்னுடைய எந்த படத்திலும் ஜனகராஜ் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாராம். அதனால் குணா படத்துக்கு பிறகு ஜனகராஜ் கமலின் எந்த படத்திலும் நடிக்கவில்ல. இந்த தகவலை குணா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் ராசி அழகப்பன் பகிர்ந்துள்ளார்.