தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, நீத்தா தம்பதியின் இளைய மகன் ஆனந்துக்கும், ராதிகா மெர்சென்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மார்ச் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை திருவிழா போன்று திருமண நிகழ்ச்சிகள் நடக்கிறது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடக்கும் இந்த பிரமாண்ட திருமண நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

பாலிவுட்டின் முக்கிய ஆட்கள் எல்லாம் ஏற்கனவே ஜாம்நகருக்கு சென்றுவிட்டார்கள். திருமண நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களை புகைப்படங்கள், வீடியோக்கள் எடுப்பதில் புகைப்படக் கலைஞர்கள் படுபிசியாக இருக்கிறார்கள். இவ்விழாவிற்கு உலகம் முழுவதிலும் இருந்து பெரும் கோடீஸ்வரர்கள், முக்கிய பிரமுகர்கள் வர உள்ளார்கள்.

குஜராத் ஜாம்நகரில் உலக நாடுகளின் பிரபலங்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை குவிந்துள்ளனர். அதில், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனத் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க், இவாங்கா டிரம்ப், பூட்டான் மன்னர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

அதேபோல் சினிமா பிரபலங்களான அமிதாப்பச்சன், ஷாருக்கான், ரஜினிகாந்த், ராம் சரண் , ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கரீனா கபூர், அமீர்கான், இயக்குநர் அட்லீ உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். மேலும், விளையாட்டு வீரர்களான சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, பிராவோ, பொல்லார்ட், ட்ரெண்ட் போல்ட், சாம் கரன், சாய்னா நேவால் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் திரையுலகை பொறுத்த வரை இயக்குனர் அட்லீ தனது மனைவி பிரியா மற்றும் குழந்தையுடன் கலந்து கொண்டுள்ளார். சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஏற்கெனவே அட்லீ திருமண விழாவில் பிரியாவுடன் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்பொழுது கியூட் லுக்கில் இருவரும் திருமண விழாவில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

