இளையராஜாவின் 6 மெட்டுகளை வைத்துக்கொண்டு அதற்காக கதை எழுதிய R சுந்தர்ராஜன்.. படம் பட்டிதொட்டியெங்கும் ஹிட்..

By vinoth on பங்குனி 1, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மட்டுமில்லை, இந்திய மற்றும்  சினிமாவிலேயே அதிக படங்களுக்கு இசையமைத்தவர் என்ற பெருமைக்குரியவர் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனைப் படைததுள்ள அவர் இப்போது 82 வயதாகும் நிலையிலும் வெற்றிமாறன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.

தமிழ் சினிமாவில்  இளையராஜா கோலோச்சிக் கொண்டிருந்த 80களின் காலகட்டத்தில் அவரின் இசையால் மட்டுமே தங்கள் படங்களை வெற்றிப் பெறச்செய்தவர்கள் ஏராளம். ஆனால் அவரது இசைக்கு இணையாகக் கதைகளை உருவாக்கி, அவற்றில் கிரீடமாக இளையராஜா பாடல்களை வைத்து வெற்றி பெற்றவர்கள் ஒருசிலரே.

   

அப்படிப்பட்ட இயக்குனர்களில் ஒருவர் ஆர் சுந்தர்ராஜன். ஆர் சுந்தர்ராஜன் முதன் முதலில் இயக்கிய பயணங்கள் முடிவதில்லை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ் சினிமாவையே கலக்கியது. அந்த படத்தில் இடம்பெற்ற இளையநிலா பொழிகிறது மற்றும் அடி ஆத்தா ஆத்தோரமா வாரியா போன்ற பாடல்கள் தமிழ் இளைஞர்களை மயக்கி வசியம் செய்தன. அதிலிருந்து -இளையராஜா – ஆர் சுந்தர்ராஜன் கூட்டணி எதிர்பார்க்கப்படும் ஒன்றாக அமைந்தது.

   

இந்நிலையில் இளையராஜா ஆறு பாடல்களுக்கான மெட்டுகளை வைத்துக்கொண்டு இதை ஒரே படத்தில் பயன்படுத்தும் இயக்குனருக்குதான் இந்த மெட்டுகளை தருவேன் எனக் கூறியபோது, அந்த மெட்டுகளை கேட்டு வியந்த சுந்தர்ராஜன் அந்த மெட்டுகளுக்காகவே எழுதிய கதைதான் ‘வைதேகி காத்திருந்தாள்’. அந்த படம் 1984 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்தது.

 

விஜயகாந்த், ரேவதி, கவுண்டமணி, செந்தில் நடிப்பில் சுந்தர் ராஜன் இயக்கிய அந்த படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களுமே ஹிட்டாகின. இன்றுவரை ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு, அழகு மலராட மற்றும் மேகம் கருக்கையிலே  ஆகிய பாடல்கள் இளையராஜாவின் புகழைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன என்று சொன்னால் மிகையாகாது.