சேலம் அரசியல் பிரமுகர் “ஏ.வி ராஜு” தற்போது செய்தியாளர்கள் நேர்காணலின்போது “திரிஷா” அவர்களை பற்றி சில அவதூறாக பேசிய சர்ச்சையாக கிளப்பி வந்தார். அதற்காக சினிமா பிரபலங்கள் பலரும் மக்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து வந்தார்கள். அதில் முக்கியமாக நடிகர் “சேரன்” அவர்கள் இதற்கு இணையத்தில் பதிவு ஒன்று போட்டு தன் எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்,
ஆனால் திரிஷா இதற்கு பெரிதாக ரியாக்ஷன் எதுவும் செய்யாமல் இரண்டு நாள் பிறகு தான் இதைப் பற்றி ட்வீட் போட்டு பேசியுள்ளார், என்றும் த்ரிஷாவுக்காக சேரன் அவர்கள் கண்டனம் தெரிவித்ததற்கு நன்றி கூறவில்லை என்றும் பலரும் திரிஷா விமர்சித்து வந்தார்கள். அதற்கு திரிஷா தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். திரிஷாவை பற்றி ஏ.வி ராஜு தவறாக பேசி சர்ச்சை கிளப்பி வந்த போது திரிஷா கமல்ஹாசன் நடிக்கும் மணிரத்தினம் இயக்கும் படமான “Thug life” படத்தின் சூட்டிங் காக வெளிநாட்டான “செர்பியாவில்” படப்பிடிப்பு தளத்தில் நடித்துக் கொண்டிருந்ததாகவும்,
இயக்குனர் மணிரத்தினம் கண்டிப்பாக சொல்லிவிட்டாராம் படப்பிடிப்பு தளத்தில் யாரும் மொபைல் பயன்படுத்தக் கூடாது என்று, அதனால் தன்னால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது தெரியாமல் 24 மணி நேரம் கழித்து தான் அதை கண்டறிந்து அதற்கான எதிர்ப்பு கண்டனத்தை தெரிவிக்க தாமதமானதுக்கு இதான் காரணம் என்று, அதுமட்டுமின்றி சேரன் அவர்களுக்கு நன்றி கூறவில்லை என்ற ஒரு சர்ச்சையான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படி,

சேரன் அவர்களின் செல் போன் நம்பரை கண்டறிந்த அவருக்கு தனிப்பட்ட முறையில் அழைத்து நன்றி தெரிவித்துள்ளாராம் திரிஷா. இந்த சச்சையான பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் தற்போது தான் சூடேறி இது மிகவும் வைரலாக பரவி வருகிறது. இதற்கு த்ரிஷா அவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார், இதனால் பலரும் ஏவி ராஜு அவர்கள் மீது கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
